பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-இருபல்கலைக்கழகம் 207 பின்னர் கீழ்க்கண்ட பாவேந்தர் பாடல்களுக்குப் பரத நாட்டியமும், ஓரியண்டல் நடனமும் நடைபெறும். "அதோ பாரடி அவரே என் கணவர் "மாடுமேய்ப்பவனிடம் எனக் கென்ன வேலை" "கூடை முறங்கள் முடித்துவிட்டோம் காடை இறக்கை போலே "பாண்டியன் என் சொல்லைத்தாண்டிப் போனாண்டி" "சோலையில் ஓர் நாள் என்னையே தொட்டிழுத்து முத்தமிட்டான் "உவகை, உவகை உலகத்தாயின் கூத்து" திருவாளர் ஞானமணி' இசை அமைப்பதிலும் பாடுவதிலும் தன்னிகரற்ற மாமேதை என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் எத்தனையோ இசைப்புலவர்கள் பாடுவதையும், இசை அமைத்திருப்பதையும் கேட்டிருக்கிறேன். ஆனால் ஞானமணி போல் திறமைமிக்க இசைப்புலவர் சொற்பம். 'மாடுமேய்ப்பவனிடம் எனக்கென்ன வேலைவஞ்சி என்றழைத்தான் ஏனென்றேன் மாலை" என்ற பாடலை ஞானமணி பியாகடை ராகத்தில் பாடும்போது, ஆயிரம் முறை கேட்டாலும் ஆசை தீராது. அப்படியே ஒவ்வொரு பாடலும். "வெய்யில் தாழவரச் சொல்லடி-இந்தத் தையல் சொன்னதாகச் சொல்லடி" என்ற பாடலின் கடைசியில் உள்ள "தாய் அயலூர் சென்று விட்டாள் நாளை-சென்று தான் வருவாள் இன்று நல்லவேளை வாய் மணக்கக் கள்ளொழுகும் பாளை-நாள் மாறி விட்டால் ஆசை எல்லாம் துளே’ என்ற அடிகளை சங்கராபரணம் ராகத்தில் ஞானமணி பாடுவதும், இரத்தினம் என்ற பெண் அபிநயம் பிடிப்பதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். நண்பர்கள் சிலர் இந்தப் பாடலைத் திரும்பத் திரும்ப பாடும்படி ஞானமணியை வற்புறுத்திக் கேட்பார்கள். "பாண்டியன் என் சொல்லைத்தாண்டிப் போனாண்டி" என்ற பாடல் கல்யாணிராகம். அதற்கேற்பப் பரதநாட்டியம் நடைபெறும். 'உவகை உவகை என்று தொடங்கும் பாடலுக்கு ஒரியண்டல் நடனம் ஆடுவார்கள். 1) திருவாளர் எம்.எஸ்.ஞானமணி தற்போது சென்னையில் இருக்கிறார். தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். 21.1.72ஆம் நாள் வெளியான ஆனந்தவிகடனில் அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன். நான் ஏன் பிறந்தேன்? என்ற பெயரில் எழுதிய தன் வரலாற்றுக் கட்டுரையில் பாராட்டி எழுதியிருக்கும் இசைப்புலவர் ஞானமணி இவரே