பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 209 பார்த்தேன். மேலும் தொடர்ந்து நடத்த என்னால் இயலாது என்பதை முடிவாக உணர்ந்து கொண்ட நான் முருகு சுப்பிரமணியத்திடம் “விருப்பமானால் நீங்களே நடத்திக் கொள்ளுங்கள்' என்று சொன்னேன். அவர்களாலும் இயலாது என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே இன்ப இரவு நாடகக்குழு கலைக்கப்பட்டது. கலைஞர்கள் தங்களுக்குரிய ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக ஊர் திரும்பினர். இந்த இன்ப இரவு நாடகம் நடத்தியதில் எனக்குப் பொருள் இழப்பு ஏற்பட்டாலும், கவிஞர் சுரதா, வேணுகோபால் சர்மா, ஞானமணி போன்றாரோடு நெருங்கிப் பழகும் நல்ல வாய்ப்பினைப் பெற்று மகிழ்ந்தேன். இவர்களுடைய மேதாவிலாசம் அப்பொழுதே எனக்குப் புலப்பட்டது. கவிஞர் சுரதாவுக்கு அப்போது இருபது வயதிருக்கும். சுறுசுறுப்பாகவும் துடிப்பாகவும் காணப்படுவார். அப்போதே கவிதை எழுதிக் கொண்டுவந்து பாவேந்தரிடம் காண்பிப்பார். பாட்டின் நுட்பத்தைப் படித்துணர்ந்த பாவேந்தர் சுரதாவுக்கு இணை சுரதாதான் என்று வாயாரப் பாராட்டியதை என் காதாரக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அப்போது கவிஞர் சுரதா எழுதிப் பாவேந்தரிடம் காட்டிப் பாராட்டு பெற்ற சிலவரிகள் இன்றும் என் நினைவில் இருக்கின்றன. அவ்வரிகள் வருமாறு: "தின்னும் இதழ் பூரிக்க நிலாமுற்றத்தில் சீக்கிரமாய்ப் போயமர்ந்தேன்; வஞ்சி வந்தே என்ன அத்தான் ஊர்ச்சேதி? அம்மா அப்பா எல்லாரும் நலந்தானா? "வேர்த்துப்புழுங்காத மார்கழியில் குளிருக்குப் போர்த்துத்தான் வந்தது புத்தேடு" சரசுவதி திருமணம்: இன்ப இரவு நாடக ஒத்திகை சென்னையில் நடந்து கொண்டிருந்த போது, என் சொந்த அலுவல் காரணமாக நான் போடிநாய்க்கன் பட்டிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. நாடகப் பொறுப்புகளை முருகு சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்துவிட்டு நான் ஊருக்குத் திரும்பினேன். நான் சென்றமுறை கானாடுகாத்தான் சென்றிருந்தபோது பாவேந்தரின் மூத்த மகளான சரசுவதியின் திருமணம் பற்றிப் பேச்சு நடந்தது. திரு.வை.சு. சண்முகம் செட்டியாரும் அவர் மனைவி மஞ்சுளாபாய் அம்மையாரும் 1) பொங்கல் மலர்