பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 இன்ப இரவு சரசுவதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் தீவிரமாக இருந்தனர். வேலூர் கண்டர் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த தமிழாசிரியர் புலவர். கண்ணப்பன் அவர்களே அந்த வரன். திருப்பூர் திராவிடர் கழகத் தோழரும் புரவலருமான திரு.எஸ்.ஆர். சுப்பிரமணியம் வீட்டில் புலவர் கண்ணப்பனும், மஞ்சுளாபாயும் எதிர்பாராமல் சந்தித்துப் பேசியபோது இந்தத் திருமணப் பேச்சுத் துவங்கியது. பிறகு வை.சு. சண்முகம் தம்பதியர் இத்திருமண முயற்சியில் முன்னின்று எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். நான் என் சொந்த ஊரான போடிநாய்க்கன்பட்டியில் இருந்தபோது 8.1.44ஆம் நாள் பாரதிதாசன் சரசுவதியின் திருமணம் பற்றி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதம் வருமாறு: புதுச்சேரி 8. 1.44 அன்புள்ள திரு. ரெட்டியார் அவர்களுக்கு வணக்கம், நானும், வை.சு.வும், கோனாப்பட்டார்களும் திருமண விஷயமாக பேசி முடிவு செய்த திட்டப்படி, இன்று வை.சு.வுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தின் நகலை இதில் வைத்திருக்கிறேன். இதை மனதில் வைத்துக் கொண்டு, தயவு செய்து தாங்கள் கரூருக்கு நேரில் மாப்பிள்ளை இருக்கும் இடம் தேடிச் சென்று, நான்தங்களை அனுப்பியதாகச் சொல்லிப் பேசவும், அதில் சொல்லியுள்ள திட்டங்களை அவர்களிடம் (கண்ணப்பரிடம்) கூறிப் பதில் தெரிந்து எழுதவும். ஏன் தங்களை அனுப்புகிறேன் என்றால் வை.சு. மூலமாகத்தான் மணமகனுடைய கருத்து எனக்குத் தெரிவிக்கப் பட்டது. நேரில் என்னிடம் திருமணப் பேச்சு நடக்கவில்லை. ஆதலால் ஒருவருக்கிருவராகக் கலந்து பேச வேண்டுமென்று நான் நினைக்கிறேன். பாரதிதாசன் கவிஞரின் கடிதப்படி நான் கரூர் சென்று கழகத்தோழர் திரு. இரத்தினம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) அவர்களைத் தேடி அடைந்தேன். அவர் வீட்டில் மாப்பிள்ளை கண்ணப்பர் அவர்களும், மஞ்சுளாபாய் அம்மையாரும், ஈரோடு திரு. சண்முக வேலாயுதம் அவர்களும் இருந்தார்கள். பாவேந்தர் என்னை அனுப்பி வைத்திருப்பதாகச் சொல்லி, விபரங்களையும்