பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 இன்ப இரவு கிருஷ்ணராஜ், கா. கருப்பண்ணன், திருச்செங்கோடு என்.கே.பி.வேல், கா.பெருமாள் முதலிய தோழர்களும் மாலை 6 மணிக்குக் கட்டிப்பாளையம் போய்ச் சேர்ந்தோம். மறுநாட்காலை (22.1.44) 9 மணிக்குச் சேலம் கல்லூரி முதல்வர் திரு. இராமசாமிக் கவுண்டர் தலைமையில மணமக்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பேசினார்கள். முத்தமிழ் நிலையப் பங்குதாரர்களாகிய முருகு சுப்பிரமணியம் முதலிய தோழர்களும் வந்திருந்தார்கள். மக்கட் கூட்டம் நிறைந்திருந்தது. பாராட்டுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அன்று பெரியார் அவர்களை இடைவேளையில் பார்த்து ஏதாவது முத்தமிழ் நிலையத்துக்குப் பொருளுதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். ஊருக்குப் போய்க் கவனிப்பதாகச் சொன்னார்; 30.1.44ஆம் தேதி தாம் சொன்னபடியே பாவேந்தர் முகவரிக்கு ரூ.250/-க்குக் காசோலையொன்று அனுப்பி வைத்தார். பாரதிதாசன் நிதி: 1945ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 10ஆம் நாள், பாரதிதாசனுக்கு நிதி சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்ற நினைவு எனக்கு. எதிர்பாராமல் திடீரென்று வந்தது. அந்த விபரத்தை என் நாமக்கல் நண்பர் கா. கருப்பண்ணன் அவர்களிடம் சொன்னேன். செய்யலாம் என்று சொல்லி என் எண்ணத்திற்கு அவரும் ஆதரவு காட்டினார். 25.2.1945ஆம் நாள் நான் சென்னைக்குச் சென்று பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பார்த்து, பாரதிதாசன் அவர்களுக்கு நிதி சேர்த்து அளிக்க விரும்புவதாகச் சொல்லி, அவர்களது சம்மதத்தைக் கேட்டேன். அதற்குப் பெரியாரவர்கள் "நல்ல காரியம்; ஆனால் என் பொறுப்பில் அதை வைத்துக் கொள்ள முடியாது. என்னாலான எல்லா உதவிகளையும் செய்கிறேன் என்று கூறித் தம் சம்மதத்தைத் தெரிவித்தார்கள். பெரியார் இவ்வாறு சொன்னதைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தேன், பெறற்கரிய பேறு பெற்றதைப்போல. மறுநாள் திருவாளர்கள் எஸ்.இராமநாதன், டாக்டர் ஏ.கிருஷ்ண சாமி, எஸ்.இலக்குமிரதன் பாரதி முதலியவர்களைக் கண்டு நிதிக்குழுவில் உறுப்பினர்களாக இருக்க ஒப்புதல் கேட்டேன்; அவர்களும் ஒத்துக் கொண்டார்கள். மற்றும் அறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார், முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார், சேலம் கல்லூரி முதல்வர் அ.இராமசாமிக் கவுண்டர் ஆகிய எல்லாருக்கும் குழுவில் உறுப்பினராக இருக்கும்படி கோரி கடிதம் எழுதினேன். எல்லாரும்