பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கவியரசர்பாரதிதாசன் கி.ஆ.பெ.வி. அவர்களுக்கு இதெல்லாம் பிடிக்காது. ஒழுங்கு மீறிய செய்கையை அவரால் ஒப்ப முடியாது. அதற்குப் பணிந்து போகவும் அவரால் இயலாது. உடனே தாம் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக ஒரு கடிதம் எனக்கு அனுப்பி விழாக் குழுவில் வைக்கும்படி சொன்னார். இச்சங்கடமான நிலைமையில் அவர் மேற்கொண்ட முடிவு நியாயமென்று எனக்குப் பட்டபடியால் நானும் எனது ராஜினாமாவுடன் சேர்த்துப் பொருளாளர் ராமநாதனுக்கே அனுப்பி விட்டேன். தலைவர், தாம் இந்தக் குழுவி லிருந்து விலகிக் கொண்ட அறிக்கையை முன்னர் நிதியனுப்பியவர் களுக்கும் மற்றவர்களுக்கும் அனுப்பி விட்டார் என்று அறிந்தேன். குழுவினர் காதல்’ அலுவலகத்தில் கூடி நிலைமையைப் பரிசீலித்தனர். இதற்குள் பராபரியாகச் சில உண்மைகள் எங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்து விட்டன. விளம்பரம் உண்மை தான் என்றும, யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை கவிஞரைச் சந்தித்துத் திசைதிருப்பி விட்டார் என்றும், பத்து நாடகங்கள் போட்டு 60 ஆயிரமாவது வசூலித்து விடலாமென்று கவிஞரிடம் இவர் சொல்லி அவருடைய அனுமதியைப் பெற்றிருப்பதாகவும் தெரிந்தது. கவிஞர் எடுப்பார் கைப்பிள்ளை. எளிதில் யாரையும் நம்பி விடுவார். கடைசி வரையிலும் இந்தச் சுபாவத்தால் அவர் பட்ட அவதிகள், எண்ணில. மணிவிழா விஷயத்திலும் அவர் பல துன்பங்களுக் காளானார். விழாக்குழு முழுமையும் ராஜினாமா செய்து விட்டது. இந்தச் செய்தியைக் கவிஞரிடம் நேரில் சென்று தெரிவித்து அது வரையுள்ள கணக்குகளையும் ஒப்புவித்து விடுவது என்று முடிவாயிற்று. என் தலைமையில் ஒரு தூதுக் குழு புதுச்சேரி செல்வதென்று முடிவு செய்யப்பட்டது. என்னுடன் ஒரு சில நண்பர்கள் உடன் வந்தனர். இப்பொழுது அவர்கள் அனைவர் பெயரும் என் நினைவில் இல்லை. அன்பில் தர்மலிங்கம் இருந்தார்; நண்பர் பராங்குசம் இருந்தார் என்று நினைவு. தமது வீட்டு முற்றத்தில் சாய்வுநாற்காலியில் சிங்கம் படுத்துக் கிடப்பது போல் கவிஞர் சாய்ந்திருந்தார். நண்பர்கள் என்னை முதலில் உள்ளே போகச் சொன்னார்கள். வாசற்படியில் நுழைந்து இடைகழியில் சென்று அவரைப் பார்த்தவாறு நேரில் நின்று விட்டேன். கிட்டே போகத் துணிவில்லை. சாய்ந்திருந்த கவிஞர் நிமிர்ந்து உட்கார்ந்தார். பிறகு ரிலைன் பண்ணிட்டியில்லே என்று கேட்டார். ஆமாம், ரிலைன் பண்ணிட்டன் என்றேன். அப்ப,