பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கவியரசள்பாரதிதாசன் "அவண்டா தமிழன்-நீ வேண்டியதில்லை, உன் கவிதை எனக்குப் போதும் என்று சொல்கிறானே. அவன் மறத்தமிழன். அவன் அஞ்சா நெஞ்சுடையவன்" என்றார். மறுபடியும் என்னை இழுத்து அருகில் அமர்த்திக் கொண்டார். பாவேந்தர் என்னுடன் உணவருந்தினார். தாழ்வாரத்தில் ஒரு பாயைக் கொண்டு வந்து போட்டு இளைப்பாறச் சொன்னார். சிவாஜியின் பதினேழாவது ஆண்டு மலர் வெளியாக வேண்டிய தருணம். அதற்கு ஒரு கவிதை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டேன். சரி நீ கொஞ்சம் தூங்கு. நான்கு மணிக்கு எழுப்புகிறேன் என்றார். உதட்டில் சூடுபட்டு விழித்துக் கொண்டேன். என் தலைமாட்டில் இடது கால் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு, தமது இடது கையால் என் கழுத்தில் கைகொடுத்துத் துரக்கி காப்பி நிறைந்த கோப்பையை என் உதடுகளில் வைத்துப் பருக வைத்தார். "கழுதை! என்ன இப்படி ஒரேடியாத் துங்குகிறாயே! அரவிந்தாச்ரமம் போக வேண்டுமென்று சொன்னாய், உடனே போய் வந்துவிடு. நேரமாகி விட்டால் கதவு மூடி விடுவான் என்று வாசலில் தயாராக இருந்த வண்டியில் என்னை அனுப்பி வைத்தார். திரும்பி வந்தபோது மாலை 6 மணியாகி விட்டது. “பாட்டு வேணு மிண்ணு கேட்டியே இந்தா” என்று ஒரு தாளை நீட்டினார். அதில் என்னையும் சிவாஜியையும் பாராட்டி எழுதியிருந்தார். நான் மலருக்குக் கவிதை கேட்டால், என்னைப் பற்றி எழுதியிருக்கிறீர்களே!" என்றேன். “முட்டாளு! உனக்கு என்ன பஞ்சம் தெரியுமா? பணப் பஞ்சமில்லே. புகழ்ப் பஞ்சம். உன் பெருமை ஒரு பயலுக்கும் தெரியாது. நான் தாண்டா அதை நாலு பேர் அறியச் சொல்லனும். சும்மாப் போடு. என் கையெழுத்திலே போட்டிருக்கிறேன்” என்றார். அவரது குழந்தை மனத்தையும் அன்பின் பெருமையையும் கண்டு மெய் சிலிர்த்தேன். சிவாஜியின் பதினேழாவது ஆண்டு மலரில் வெளியான அந்தப் பாடல் பின்வருமாறு: எழுத்தெல்லாம் புதியநடை எண்ணமெலாம் தன்னுடைமை எனவே நாட்டின் பழுத்த பொதுத் தொண்டு செய்வான் திருலோக சீதாராம் பரப்பும் ஏடு