பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 24! தொடங்கையில் வருந்தும்படி இருப்பினும் ஊன்றிப்படி அடங்கா இன் பம்மறுபடி ஆகும் என்ற ஆன்றோர் சொற்படி நூலைப்படி: 'இந்த பாடலை எவ்வளவு நேரத்தில் பாடினர்கள்? என்று நான் தொகுத்து வைத்திருந்த குயில் தொகுதியை அவர் கையில் கொடுத்து விட்டுக் கவிஞரைக் கேட்டேன். பாடலை எழுதி அடித்துத் திருத்தி அமைத்திருப்பாரோ என எனக்கு அறிய ஆவல். கவிஞர் கைவிரல்களில் சடக்குப் போட்டுக் கொண்டு ஒரு நொடியில் என்றார். இந்தப் பாடலைப் படிப்பதற்கு எவ்வளவு நேரமோ அவ்வளவு நேரம்தான் இயற்றுவதற்கும் என்றார் கவிஞர். இவ்வாறு கூறிவிட்டுக் கவிஞர் அந்தப் பாடலை மெல்லிய குரலில் இசையோடு பாடிக்காட்டினார். யதுகுலகாம்மோதி இசையிலும் ஆதி தாளத்திலும் அமைக்கப்பட்ட இப்பாடலை 'எடுப்புடனும் உடனெடுப்புடனும் அவர் பாடினார். கைவந்தக் கவிஞருக்குக் கவிதை பாடல் மிக எளிதே என நான் அன்று அறிந்து கொண்டேன். நான் தொகுத்து வைத்திருந்த குயில் தொகுதியைக் கையில் வாங்கியவுடன் திரு. முருகரத்தினம் வாழ்க’ என்று எழுதிப் 'பாரதிதாசன் என்று கையெழுத்திட்டு 23.2.64 என நாளும் இட்டார் கவிஞர். அவர் வெளியிட்டு நான் தொகுத்து வைத்த குயிலிலும் என்னை வாழ்த்தி வரைந்த வாழ்த்திலும் அவர் இன்றும் என்னோடு வாழ்கிறார். அவர் வாழ்த்து நான் பெற்ற பட்டங்களுள் ஒன்றே எனக் கருதுகிறேன். 1964ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் பாவேந்தரிடமிருந்து அழைப்பு வந்தது. தியாகராய நகரிலுள்ள அவர் இல்லத்திற்கு நான் விரைந்து சென்றேன். பாவேந்தர் என்னிடம் இவ்வாறு கூறினார். “என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்று பல ஊர்களிலிருந்து பலரும் என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் கொண்டாட வேண்டும் என்று நாரணதுரைக் கண்ணன் வந்தார். எல்லாவற்றுக்கும் மேலாகச் சென்னையில் ஒரு நடு அமைப்பை ஏற்படுத்தித் தமிழ் நாடெங்கும் கொண்டாடுவதை ஒருங்கிணைக்கலாம். நீயே இங்கு அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டு நடத்து. மற்றவர்களுக்கு விழாக் கொண்டாடுவதற்கு அனுமதி கொடு. விழாச் செலவிற்கு எம்.ஆர். ராதாவைப் போய்ப்பார். அவர் கொடுப்பார். கொடுப்பதை வாங்கிக் கொள்.” ஒருபுறம் பாவேந்தரின் நிலைக்கு இரங்கினேன். தமிழகத்தின்