பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 இழந்த செல்வம் மாபெருங் கவிஞர்தம் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்குத் தமிழகம் அறியாத என் போன்ற இளைஞர்களையும் ஒய்ந்து ஒதுங்கியோரையும் நம்பும் நிலை ஆகிவிட்டதே என்பதே எனக்கு வருத்தம் தந்தது. தமிழகத்துத் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டிய விழா இது. ஆனால் இவர் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார். இது அவர் தாமே தேடிக் கொண்டதுதான்! அவர் ஓர் இயக்கத்தைச் சார்ந்தவர்; இயக்கமோ சிதறுண்டு கிடக்கின்றது. உட்பூசலும் ஆளுக்கு ஒரு குழுவுமாக இயங்குகிறது அது. கவிஞரும் செல்லமாட்டார்; அணைத்தும் செல்லமாட்டார், இந்தக் குறைகள் எல்லாம் கவிஞரைத் தனிமைப்படுத்திவிட்டன. தலைமைக் குழுவை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி பேச்சு வந்தது. நான் விளக்கங்கள் கேட்டேன். என் கருத்துக்களை வெளியிட்டேன். கருத்து வேறுபாடுகள் எழுந்தன. திராவிட இயக்கத்தின் பெருந்தலைவர்களை ஈடுபடுத்தி விழாவினைச் சிறப்புற நடத்த வேண்டும் என நான் எண்ணினேன். நாவலர் நெடுங்செழியன், சி.பி.சிற்றரசு, கி.வீரமணி முதலான சில பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை விழாக்குழுவில் சேர்த்துக் கொள்ளலாமா என்று கவிஞரிடம் கேட்டேன். உண்மையில் அவர்களுக்கும் கவிஞருக்கும் இடையில் அமைந்திருந்த உறவு எனக்கு முழுமையாகத் தெரியாது. வெளித்தோற்றம் போன்று உள்ளுறவு இருக்கவில்லை. என் விருப்பம் இவர்களை ஒன்றாகக் காண்பதுதான். ஆனால் கவிஞர் இவர்களை எல்லாம் எதிர்த்தார். ஆனால் யாரை வைத்து விழாவை நடத்துவது? செயல் வீரர்கள் யார்? நம் உண்மை நண்பர்கள் யார்? கவிஞர் தந்த பட்டியல் எனக்கு ஏமாற்றம் தந்தது. என் ஊக்கத்தையும் குறைத்தது. அவர் நம்பியிருந்தோர் ஒய்ந்தோர், தொண்டரற்றோர். மாற்றணியினர். எஸ்.இராமநாதன், மணவாளராமானுசம், வி.பி. ராமன், அகிலன், நாரண. துரைக்கண்ணார், ஈ.வி.கே. சம்பத்து இவர்களை எவ்வாறு அணுகுவது என்பதே என் மலைப்பு. கவிஞரிடம் என் ஏமாற்றத்தையோ மலைப்பையோ நான் காட்டிக் கொள்ளவில்லை. கவிஞர் குறிப்பிட்டவர்களுடன் இணைந்து பணியாற்ற உடன்பட்டேன். - என் உள்ளத்தில் வேறொரு தயக்கமும் இருந்தது. 1964ஆம் <£%öri-mêu $í5 <£ysörig άύ ςτύμόυ udrT£$£)ai) Diploma in Anthropology arsüp Gğricytb, gg96ür LDrgiğ6)di Diploma in Linguistics sraip Ggris jub எழுதுவதற்கு என்னைத் தயார் செய்து கொண்டிருந்தேன்.