பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 243 அத்தேர்வுகளைக் கைவிடுவதா? அல்லது தேர்வுகளை முடித்துவிட்டு வந்து விழாப் பணியைப் பார்ப்பதா என்பது என் உள்ளத்தில் ஏற்பட்ட ஊசலாட்டம். என் தேர்வுப் பணிகளை முடித்துவிட்டு விழாப்பணியில் முழுமூச்சாக ஈடுபடுகிறேன் என்று கவிஞரிடமும் கூறிக் கொண்டேன்; அவரும் அதற்கு உடன்பட்டார். நாரணதுரைக்கண்ணர் விழாவுக்கான சில முயற்சிகளை மேற்கொண்டிருந்திருக்கலாம். இந்நிலையில் திரு. ஈ.வி.கே. சம்பத்தவர்களிடம் “கவிஞருக்குப் பிறந்தநாள் விழாக் கொண்டாட எண்ணம் கொண்டு விழாவுக்கான முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. தங்கள் ஒத்துழைப்பு வேண்டும்" என்று நண்பர் ஒருவர் வேண்டிக் கொண்டார் போலும். உடனே சம்பத்து கவிஞருக்கு விழா எடுக்க முன்னரும் சிலமுறைகள் முயற்சி மேற்கொண்டு நடைபெறாது தோல்வியில் முடிந்தது. இனிமேல் யாரும் உதவி செய்யமாட்டார்கள். அவர் சும்மா இருக்கட்டும் என்று கூறிவிட்டார். இக்கூற்றைக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் கவிஞரிடம் சென்று அப்படியே கூறிவிட்டார். கவிஞருக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும், வருத்தமும் ஏற்பட்டன போலும். சம்பத்தைக் கவிஞர் நல்லுள்ளத்தோடு நம்பிக் கொண்டிருந்தார். இவ்வாறு விழா முயற்சிக்கு முதலிலே ஒர் இடி ஏற்பட்டது. இந்த ஏமாற்றத்தையே என் அண்ணாவுக்கு மடல் வழி எழுதி என் மீது குறைபட்டுக் கொண்டார் கவிஞர். விழா மத்தியக் குழு அமைப்பது பற்றிக் கவிஞர் குறிப்பிட்டுவிட்டு "இதை நும் தம்பி முருகரத்தினத்திடம் கூறினேன். எல்லாம் எனக்குத் தெரியும். நான் நாரண துரைக்கண்ணரிடம் கலந்து ஏற்பாடு செய்து கொள்கிறேன் என்றார். மறுநாள் வந்தார் அந்த மத்தியக் கமிட்டியில் நெடுஞ்செழியன், சிற்றரசு, முதலியவர்களைப் போடலாமல்லவா என்றார். கடுமையாக மறுத்தேன். பிறகு வீரமணியைப் போடலாமா என்றார். மறுத்தேன். எஸ்.ராமநாதன், முன்னாள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மணவாள ராமானுஜம், வி.பி. இராமன், அகிலன் முதலியவர்களைச் சொன்னேன். அவர் அவர்களை மறுத்தார். இன்று-அதாவது பதினைந்து நாட்களுக்குப் பின் ஆர்ட் டைரக்டர் அம்மையப்பன் வாயிலாகச் சேதி அனுப்பப்பட்டிருக்கிறது. வேறு யாரையாவது கொண்டு விழாவை நடத்திக்கொள்ளச் சொல்லுங்கள் என்று. நான் இவர்களைக் கேட்டதுண்டா விழா நடத்திச் சொல்லி?” என்று என் அண்ணாவுக்கு எழுதியிருந்தார். இதேந்ெதர் நினைவுகள் என்னும் இந்நூலின் முதற்பகுதியில் ...... வெளியிடப்பட்டுள்ளது.