பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர் # o - 245 உரிமையோடும் பெருமையோடும் எங்களை அவர் தம் குடும்பத்தில் சேர்ததுக் கொண்டார். அவருக்குச் சாதி உணர்வு இருந்ததா என்பது நான் அறியமுடியவில்லை. அவரோடு பழக்கம் கொண்டதில் எனக்கும் பெருமையும் பெருமிதமும் ஏற்பட்டன." அவர் தலைமையில் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற திட்டம் அப்போதே என்னிடம் உருவாகியிருந்தது. ஆனால் அது நடைபெற முடியாதபடி சாக்காடு குறுக்கிட்டது. கனகசுப்புரத்தினம் கவிஞர் ரத்தினம்; சுப்பிரமணிய பாரதியாரின் செழுஞ்சொற் பாப்புனை திறத்தால் இழுக்கப்பட்டுப் பாரதிதாசனார் ஆனார். வண்டமிழ்ப் பாவிற்கு வேந்தராக விளங் கினார். அறிவிலும் உணர்விலும் வாழ்விலும் முதிர்ச்சியடைந்தார்; பைந்தமிழ் உலகம் அவரைப் பாராட்டியது: கருத்து வேறு பட்டோரும் அவர் பாத்திரத்தைப் பாராட்டினர், தமிழகம் அவரை ஒரு குரலிலே ஏற்றிப் போற்றியது. பாவேந்தருக்கு மனநிறைவில்லை. அவர் மனம் மேலும் புகழ் நாடியது; பொருள் நாடியது. தம் படைப்புக்கள் மீது நம்பிக்கை வைத்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்து உலகப் புகழ்பெற அவர் உள்ளம் விழைந்தது. நம் காவியங்களைப் படமாக்க வேண்டும் என்ற ஆசை கொண்டு முதிர்ந்த வயதில் பட்டணம் புறப்பட்டார். அவர் பண்டுதொட்டே அரசியல்வாதியுமாவார். ஆனால் தலைவராகவில்லை. முழுநேர அரசியற் பணியாளரே தலைவராவார். அரசியலோ கட்சியரசியலாகிக் கட்சிக்குள் குழு அரசியலுமாகிச் சீர்கெட்டது. பல்குழுப் பாழ் செய் உட்பகைக்குள் சிக்குண்டார் பாவேந்தர். இந்த அரசியல் பூசலுக்கு அவர் தகுதி பெற்றவர் இல்லை. அவர் தோல்வி கண்டார். அவர் அரசியலில் துாற்றுதலும் போற்றுதலும் மேற்கொண்டார். அவற்றுக்கு பெரும்பான்மையான காரணம் அவர் நலம் கருதியே போலும். அவர் குயில் அண்ணாவையும், எம்.ஜி.யாரையும் துற்றிப் பாடியது தம் பேசும் பட வாய்ப்புக்கள் அவர்களால் கெட்டுவிட்டன என்ற வருத்தம் அவருக்கிருந்தது. சிவாசியைப் போற்றித் துதிபாடியது குயில், பேசும்பட வாய்ப்பினை எதிர்பார்த்து, பெரியாரின் தி.மு.க. வெறுப்பரசியலில் புகுந்து கண்ணிர்த் துளிகளைச் சாடினார் கவிஞர். புகழையும் பொருளையும் நாடிய அவர் உள்ளம் ஏமாற்றம் உற்றது. நிறைவேறாத ஆசைகள், உள்ளார்ந்த வருத்தம், எதிர்பாராத ஏமாற்றம், நிறைந்த உலகில் தனிமை-இவையே இறுதியில் அவர்