பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 உள்ளத்தில்எழுதியஒவியம் "அடித்தாலும் உதைத்தாலும் இரவில் இவ்வளவு இன்பத்தை எவன் தருவான்?" என்று நினைத்தாள் அவள். கணவன்மீது அளவில்லாத அன்பு அவள் உள்ளத்தில் ஊற்றெடுத்தது. அவன் காலைத் தொழு தாள். இத்தகைய மனைவி கணவனுக்குப் பெய்யென்றவுடன் பெய்யும் மழைபோல பயன்மிக்கவள்” என்று கூறினார். இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம். சென்னை நகர மக்களெல்லாம் குடிபெயர்ந்து வேற்றுார்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். திருச்சி தேவர் ஹாலில் சுயமரியாதை மாநாடு ஒன்று நடைபெற்றது. திருவாளர்கள் செளந்தர பாண்டியன், பெரியார் ஈ.வெ.ரா., பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ஈழத்தடிகள், அறிஞர் அண்ணா போன்ற பெரிய தலைவர்கள் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பாவேந்தரும் மேடையில் இருந்தார். மற்றொரு நாற்காலி கொண்டு வரச் சொல்லி என்னை அழைத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டார். நெற்றியில் குங்குமம் அணிந்து ஆத்திகக்கோலத்துடன் அமர்ந்திருந்த என்னை எல்லாரும் ஒரு மாதிரியாகப் பார்க்கத் தொடங்கினர். யாரோ ஒரு சு.ம.தோழர் பாவேந்தரின் அருகில் வந்து யாரிவர்?’ என்று மெதுவாகக் கேட்டும் விட்டார். பாவேந்தர் அந்தத் தோழரைப் பார்த்து அவரா? அவர் ஒர் உலகம்! போ! போ என்று கூறினார். எதிர்ப்புக்கு அஞ்சாத அவர் துணிச்சலை நான் வியந்தேன். அவர்மீது நான் கொண்டிருந்த மரியாதை பன்மடங்காக உயர்ந்தது. அப்போது பெரியார் ஈ.வெ.ரா. குடியரசில் இராமாயண ஆராய்ச்சி எழுதிக் கொண்டிருந்த நேரம். மாநாட்டு மேடையில் இராமாயணத்தைக் கடுமையாகத் தாக்கியதோடு கொளுத்தவும் செய்தார். இராமாயணத்தைப் போலவே குறளும் வைதீகத்தை ஆதரிப்பது என்று சொல்லி அதையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதையும் கொளுத்த வேண்டும் என்று சொன்னார். ஆனால் பாவேந்தருக்கு அக்கருத்து உடன்பாடு இல்லை. திருக்குறளின் அடிப்படையில் கழகத்தை அமைக்க வேண்டும் என்பது அவர் கருத்து. சென்னைக்கு அருகில் உள்ள பெரியபாளையம் அங்காளம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்ற அம்மன் தலம். ஆடிமாதம் வெள்ளிக்கிழமைகளில் அங்கு நடைபெறும் திருவிழாவுக்கு அளவுகடந்து மக்கள் கூடுவர். ஆடை எதுவுமின்றி இடுப்பில் வேப்பிலை மட்டும் சுற்றிக் கொண்டு பட்டிக்காட்டு ஆடவரும் பெண்டிரும் கோவிலைச் சுற்றி உருளுதண்டம் போடுவர். இந்த அநாகரிகத்தைக் கண்டு சகிக்காத பாவேந்தர் ஒருநாள் தம்