பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 உள்ளத்தில் எழுதிய ஓவியம் கொண்டேன். அப்பாடலை மிகவும் பத்திரமாக வைத்து நாள்தோறும் பாராயணம் செய்து வந்தேன். அப்பாடல் என்னிடம் வந்த பிறகு என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. பொருளாதார வசதியும், புகழும் என்னைத் தேடிவந்தன. ஒருமுறை அண்ணாப்பிள்ளைத் தெருவில் உள்ள வசந்தவிகாரில் நாடக ஒத்திகை ஒன்று நடைபெற்றது. அங்கு அழகான சிறிய வெள்ளைப் பிள்ளையார் சிலை (Paper mouid) ஒன்று இருந்தது. அதன் கலையழகு பாவேந்தரைப் பெரிதும் கவர்ந்தது. நீண்ட நேரம் அதையே ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு என்னை நோக்கி, "நீ பூசை செய்வதுண்டா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். அதற்கு அவர், 'மனிதனுக்கு ஏதாவது ஒரு பிடிப்பு வேண்டும்” என்று சொன்னார். நான் ஒருமுறை பாவேந்தரோடு தங்கியிருந்தபோது முத்தமிழுக்கு என்ன சின்னம் (symbol) போடலாம் என்று பேச்சு எங்களிடையே எழுந்தது. இயற்றமிழுக்குக் கிளியும், இசைத் தமிழுக்கு குயிலும், நாடகத் தமிழுக்கு மயிலும் சின்னங்களாக இருக்கலாம் என்று முடிவு செய்தோம். பாவேந்தர் அம்முடிவை ஒரு வெண்பாவாக எழுதி முடித்தார். கீழ்க்கண்ட வெண்பா 1955ஆம் ஆண்டு எழுதப் பட்டது. பெற்ற தமிழகம் பெற்றது கைவிலங்கோ! அற்றதோ மேன்மை, அழகு தமிழ்?-சொற்கிளியும் ஆடல் மயிலும் இசைக்குயிலும் ஆட்சியம்பால் வாடல் தவிர்த்து வாழ்வோம். பெருங்கவிஞர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரின் பேச்சும் போக்கும் சில சமயங்களில் விபரீதமாக இருக்கும். ஏன் இவ்வாறு நடந்து கொள்ளுகிறார்கள் என்று நாம் சிந்தித்துப் பார்த்தாலும் நமக்கு உண்மை விளங்காது. சிறுகுழந்தைகள் செய்யும் செயல்களை அவை பொருளற்றவையாக இருப்பினும் நாம் கண்டு மகிழ்ச்சி கொள்கிறோம் இல்லையா? அப்படி இவர்கள் செயலையும் நாம் கண்டு மகிழ வேண்டியது தான். பாவேந்தர் வாழ்க்கையில் இதுபோன்ற சுவையான செய்திகள் எத்தனையோ உண்டு. கவிகாள மேகம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். பாவேந்தரும், அவர் பரிவாரமும் பா. வே. மாணிக்க நாயகர் பங்களாவில் முகாமிட்டிருந்தனர். ஒருநாள் பாவேந்தர் திடீரென்று எல்லாரையும் புறப்படுங்கள் என்று சொன்னார்; எல்லாரும் புறப்பட்டனர். பங்களா வாசலில் ஒரு டாக்சி வந்து நின்றது. எல்லாரையும் ஏறுங்கள்' என்று கட்டளையிட்டார். எல்லாரும்