பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 உள்ளத்தில்எழுதிய ஓவியம் 'கூடையில இருக்கற எல்லா முட்டையும் என்ன விலை? என்று கேட்டார். ஐந்து ரூபாய் என்று அவன் பதில் சொன்னான். “4 உருபா 15 அனா கொடுப்பியா?” என்றார் இவர். அவன் சரி என்றான். முட்டையெல்லாம் நடையிலே அடுக்கு பழனியம்மா! முட்டைக்காரனுக்கு 4 உருபா 15 அனா கொடுத்துட்டு முட்டை யெல்லாம் எடுத்துவை! என்று பாவேந்தர் கட்டளையிட்டார். இது அவர் சுபாவம். ஏன் என்று யாரும் கேட்கக் கூடாது; கேட்கவும் (Լքւգ-Այո Յ:յ. ஒருவன் மூங்கில் கட்டு ஒன்றைப் பாதையில் தூக்கி விலை கூறி விற்றுக் கொண்டு வருகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். விலை கேட்பார் பாவேந்தர். அவன் 12 உருபா என்றால் இவர் 11% உருபாவுக்கு கேட்பார். அவனும் கொடுத்துவிடுவான். அந்த மூங்கில் தற்போது வீட்டுக்குத் தேவையா? என்று நினைக்க மாட்டார். மனைவியைக் கூப்பிட்டுப் பணம் கொடுக்கச் சொல்லுவார். மனைவி பழனியம்மாள் இப்போது எதற்கு மூங்கில்?’ என்று கேட்டால் 'ச்சீப். ச்சீப்...' என்பார். அதற்குமேல் அவரை எதிர்த்து ஒன்றும் பேசக்கூடாது. பாவேந்தர், மிகச்சிறந்த நகைச்சுவை ரசிகர். யாராவது நகைச்சுவையாக எதையாவது சொல்லிவிட்டால் உடம்பு குலுங்க விழுந்து விழுந்து சிரிப்பார். அவருடைய எழுத்தில் வீரச்சுவையும், நகைச்சுவையுமே விஞ்சி நிற்கும். ஒருமுறை பாவேந்தரும் நானும் சார்லிசாப்ளின் நடித்த திரைப்படமொன்று பார்க்கச் சென்றோம். அது ஊமைப்படம். சார்லிசாப்ளின் சுவரில் ஆணி அடிப்பதுபோல் ஒரு காட்சி. அவர் மிகவும் குள்ளமாக இருந்ததால், அருகில் இருந்த நண்பர் "எதையாவது போட்டு அடி என்று கூறிவிட்டுப் போனார். (அதாவது எதையாவது உயரமாகப் போட்டு அதன்மேலே ஏறி நின்று அடி என்ற கருத்தில் அவர் சொன்னார்.) சாப்ளின் அருகில் இருந்த செய்தித்தாளைப் போட்டு அதன்மேல் ஏறி நின்று அடித்தார். இது வேடிக்கை தானே! எட்டாத காரணத்தால் அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அதன்மேல் ஏறி நின்று அடித்தார். சுவரில் ஆணி லேசில் இறங்கவில்லை. அதற்குள் சாப்ளினுக்கு வேர்த்து விருவிருத்துப் போய்விட்டது. விரலெல்லாம் வியர்வையினால் நனைந்திருந்த காரணத்தால் ஆணியும் நனைந்திருந்தது. அந்த ஆணி ஈரம்பட்டு வழுக்கியது. எனவே கழுத்தில் அணிந்திருந்த டையில் அதைத் துடைத்தார். துடைத்தவர்