பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 உள்ளத்தில்எழுதியஒவியம் போடுவது?. இது பெரிய விஷயம். இதுபோன்ற கருத்துக்கு உருவம் கொடுக்கப் புதுக்கலை அவசியந்தான்" என்று கூறினார். பாவேந்தருக்குக் காஷ்மீர் சால்வை மீது அளவு கடந்த விருப்பம். யாராவது பாதையில் போர்த்துக் கொண்டு செல்வதைப் பார்த்தால் "தோ! அவர் போர்த்துக் கிட்டுப் போறாரே அந்தச் சால்வை நல்லாருக்கல்ல. என்ன விலை இருக்கும்?' என்று கேட்பார். அவருடைய விருப்பத்தை அறிந்த நான் திருவல்லிக்கேணி செளக்லியில் தேடிப்பிடித்து ஒரு நல்ல சால்வையாக வாங்கி ஒரு விழாவின்போது அவருக்குப் போர்த்தினேன். அவருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. எந்த விழாவுக்குப் போனாலும் அதை மூலைவாக்கில் மடித்துக் கழுத்தில் போட்டுக் கொண்டு செல்வார். அவர் சென்னையில் இருந்தபோது அச்சால்வையைக் கழுத்தில் போட்டபடி அவர் திருவுருவத்தை வண்ண ஒவியமாகத் தீட்டினேன். அந்த ஒவியம் சட்டமிடப்பட்டு இன்றும் அவர் வீட்டில் மாட்டப்பட்டுள்ளது. தமது வாழ்வின் இறுதிக் காலத்தில் அப்படத்தை ஆர்ட்தாளில் நிறைய அச்சிட்டு வைத்துக் கொண்டு தம்மைக் காண வருபவர்க்குக் கொடுப்பார். பாவேந்தர் கடைசி வரையிலும் என்னிடம் மிகவும் அன்பாகவும் மதிப்போடும் பழகினார். என்னைப் பார்க்க வரும்போது கட்டாயம் பழம் வாங்கி வருவார். என்னைக் கடிந்து கொண்டதில்லை. சர்மா! சர்மா! என்று உயிரையே விடுவார். ஆனால் எல்லாரிடத்திலும் அவர் அவ்வாறு நடந்து கொண்டார் என்று சொல்ல முடியாது. கோபம் வந்து விட்டால் அவர் என்ன செய்வார் என்று சொல்ல முடியாது. சுந்தரமூர்த்தி கிராமணி என்பவர் பாவேந்தரின் நண்பர். அவர் நாட்டியக் குழுவொன்று வைத்திருந்தார். நாட்டிய நிகழ்ச்சியொன்று புதுவையில் நடத்துவதற்காக அவர் வந்திருந்தார். புயலும் மழையும் சேர்ந்தடித்த காரணத்தால் திட்டமிட்டிருந்த அந்நாட்டிய நிகழ்ச்சி நடத்தமுடியாமல் போய்விட்டது. பாவேந்தர் குடியிருந்த வீட்டுக்கு எதிர்வீட்டில் நாட்டியக்குழு தங்கியிருந்தது. சமையலுக்கு வேண்டிய ஏற்பாட்டைப் பாவேந்தர் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டில் ஒரு கட்டைப் பிரம்மச்சாரி வேலைக் கிருந்தான். அவன் ஒர் அப்பாவி. எல்லாரும் அவனைக் கோட்டைக் கறையான் என்று கூப்பிடுவார்கள். சமையலுக்காகக் கால் படி மிளகாய் வாங்கி வரும்படி பாவேந்தர் அவனை அனுப்பியிருந்தார். அவன் தவறுதலாக அரை படி மிளகாய் வாங்கி வந்துவிட்டான். பாவேந்தருக்கு அளவு கடந்த கோபம்.