பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்ர்-ஒருபல்கலைக்கழகg ub 259 “ஏண்டா இவ்வளவு மிளகா வாங்கி வந்தே?" என்று கேட்டார் பாவேந்தர். அவன் ஏதோ அரைகுறையாகப் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தான். "டேய் நில்லுடா! எருமை! நா கேக்கற. நீ பாட்டுக்குப் போய்க் கிட்டெ இருக்கறயே... கேலியா பண்றே...” என்று சொல்லிவிட்டு ஓங்கிக் கன்னத்தில் அறைந்தார். பல் ஒன்று அவன் வாயிலிருந்து தெறித்து விழுந்தது. ஏதோ கோபத்தில் அடித்துவிட்டாரே தவிர, பல்விழுந்ததைப் பார்த்ததும் அவருடைய கண்கள் கலங்கிவிட்டன. பாவேந்தருடைய வாழ்க்கையில் நினைவு கூரத்தக்க நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு. அவரோடு பழகியவர்கள் அவருடைய உணவுப் பழக்கங்களைப் பற்றி அடிக்கடி கூறுவதுண்டு. அவர் புலால் உணவை விரும்பிச் சாப்பிடும் இயல்புடையவர். நான் மரக்கறி உணவு உண்பவன். என்றாலும் நாங்கள் சேர்ந்து உணவுண்ட சில நிகழ்ச்சிகள் என் உள்ளத்தை விட்டு நீங்காமல் இருக்கின்றன. சென்னையில் இருக்கும்போது தம்புச் செட்டித் தெருவில் உள்ள ராமபவனில் இட்டிலியைக் கட்டி வாங்கிவந்து அறையில் உண்பது பாவேந்தர் வழக்கம். ஒருநாள் நானும் என் நண்பர் ஒருவரும் பாவேந்தரை அழைத்துக் கொண்டு ராமபவனுக்கு சென்று அங்கேயே சாப்பிட்டோம். அப்போது ராமபவனில் இட்டிலி காலணா. பாவேந்தர் சுவைத்துச் சாப்பிட்டார். சாப்பிடும்போது நடுவில் பேசுவது அவருக்குப் பிடிக்காது; பேசினால் சுவை தடைபடும் என்பார். சப்ளையரை அடிக்கடி சட்டினி கேட்டுச் சலித்துப் போய் இந்தா அந்தச் சட்டினித் தோண்டியை இங்கேயே வச்சுட்டுப் போ!' என்று கூறினார். அன்று எங்களுக்குச் சிற்றுண்டிச் செலவு 2 உருபா 14 அனா ஆயிற்று. அன்று அந்தபில் தொகை" பெரியது. விழுப்புரம் சந்திப்புக்கு எப்போது பாவேந்தர் போனாலும், பிளாட்பாரத்தைச் சுற்றி நோட்டமிடுவது அவர் வழக்கம். அங்கே ஒருவன் கண்ணாடிப் பெட்டியில் இட்டிலியை வைத்துக் கொண்டு விற்பான். அந்த இட்டிலி கொஞ்சம் பழையதாகவும் புளிப்பாகவும் இருக்கும். மிகவும் காரமாக மிளகாய்ப் பொடியை எண்ணெய்யில் கலந்து வைத்திருப்பான். அந்த இட்டிலி பாவேந்தருக்கு மிகவும் பிடிக்கும். பெட்டியையே காலி செய்து விடுவார். பாவேந்தர் கோபக்காரராக இருந்தாலும் சுவையான நண்பர். அவரோடு இருக்கும்போது பொழுது போவதே தெரியாது. எழுதத் தொடங்கிவிட்டால் யாரிடமும் பேச மாட்டார்; எழுதிக் கொண்டே இருப்பார். கையில் சார்மினார் எப்போதும் புகைந்து