பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 கொள்கை மறவர் தாக்கினார். சிறுத்தொண்டர் புராணத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, இதையெல்லாம் ஒரு கதைன்னு எழுதிட்டா.. நாமும வெட்கமில்லாம படிக்கறோம். என்று ஏகவசனத்தில் விளாசினார். கூழுக்கொருவனுக்கு உப்பில்லை என்றால் கோலை முறித்திடுவோம்என்ற அவர் பாட்டு வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள். பேராவூருணித் தோழர் கருப்பையா பாவேந்தர் பாடல்களை மெய்சிலிர்க்கப் பாடுவார். மாரியம்மன் கோவிலில் கூட்டம் நடந்த அன்றே தஞ்சையில் ஒரு திருமணத்துக்குப் பாவேந்தர் தலைமை தாங்கினார். மணமகள் ஒரு கைம்பெண், கைக்குழந்தை ஒன்றும் அவருக்கு இருந்தது. அச்சீர்திருத்தத் திருமணத்துக்குத் தலைமை தாங்கிச் சிறப்புற நடத்திக் கொடுத்தார் பாவேந்தர். - சாதாரணக் கழகத் தோழனிடத்திலும் பாவேந்தர் தந்தை போலப் பழகினார். 'பாரதிதாசன் கவிதைத் தொகுப்பு எனக்குப் புத்துணர்ச்சியூட்டும் அருமருந்து. எனக்குச் சோர்வு ஏற்படும் போதெல்லாம் அதை எடுத்துத் திருப்பித் திருப்பிப் படிப்பேன். புதுச்சேரிப்பக்கம் போனால் நான் அவரை வீடுதேடிச் சென்று பார்க்காமல் திரும்ப மாட்டேன். தஞ்சாவூர்ப்பக்கம் வந்தால் என்னைப் பார்க்காமல் அவரும் போக மாட்டார். புதுச்சேரியில் கடல்மீனே தின்று பழக்கப்பட்ட அவருக்குக் குளத்து மீன் (வரால்) என்றால் உயிர். தஞ்சை வந்தால் வரால்மீன் பொரியலும் குழம்பும் அவர் இருப்பிடத்திற்கு-பெரும்பாலும் திராவிடர் கழகக் கட்டிடம் அல்லது அரசர் சத்திரத்தில் தங்குவார். நான் கொடுத்தனுப்புவது வழக்கம். மரக்கறி உணவுக்காரரைக் கண்டால் மூன்று மூட்டைப் பருப்புத் தின்றால் முக்கால் அனாத் தங்கச்சத்து என்று கேலி செய்வார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ஒருமுறை பேசிய போது, தெய்வந் தொழஅள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்ற பாட்டுக்கு அவர் கூறிய புதிய விளக்கத்தைக் கேட்டு நான் மெய்சிலிர்த்துப் போனேன்.