பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 என் ஆசான் பாரதிதாசன் புலவர் மு. மதிவாணன் இக்கட்டுரையாசிரியர் புலவர் மு. மதிவாணன் மாயூரம் கூறை நாட்டைச் சேர்ந்தவர். பாவேந்தரின் மாணவர் பட்டாளத்தில் ஒருவர். இசையும் நாடகமும் கைவரப் பெற்றவர். பாவேந்தர் இசையமுதில் பல பாடல் களுக்குப் பண்ணமைத்தவர். பண்ணருவி இவரெழுதி யுள்ள இசை நூல். மதிவாணன் நாடகத் தமிழ் இயக்கம்' என்ற அமைப்பை நிறுவி நாடகத் தொண்டாற்றி வருகிறார். எங்கள் குடும்பம் பாவேந்தருக்கு மிகவும் வேண்டிய குடும்பம். சிங்கப்பூரில் இருந்த என்னைத் தமிழ்நாட்டுக்கு வரவழைத்துத் தருமபுரம் ஆதினம் தமிழ்க் கல்லூரியில் சேர்த்தவர் பாவேந்தரே. தமிழ்ப்புலவர் கல்வி பயின்றிருந்தாலும் எனக்கு ஆசிரியர் பணியில் ஈடுபாடு ஏற்படவில்லை. இசைத்துறையும் நாடகத்துறையும் என்னைப் பெரிதும் கவர்ந்த காரணத்தால், இசை நாடக அரங்குகளிலே என் பொழுதைக் கழித்தேன். பாவேந்தரைச் சந்திப்பதும், அவர் பாடல்களைப் பாடுவதும் என் இனிய பொழுது போக்கு. பாவேந்தரோடு கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் சென்று அவர் பாடலைப் பாடி மகிழ்விப்பது என் வழக்கம். பாவேந்தருக்குப் புறாவின் இறைச்சி மிகவும் பிடிக்கும். இரவு நேரங்களில் மாயூரம்கோவில் கோபுரத்தின் மீது ஏறி அங்கு அடைந்திருக்கும் புறாக்களைப் பிடித்து ஒரு கூடையில் போட்டுத் திராவிடமணி என்ற தோழரிடம் கொடுத்துப் புதுவை அனுப்புவேன். ஒருமுறை நான் கொடுத்தனுப்பிய புறாக்கள் சற்று