பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 என் ஆசான் பாரதிதாசன் கண், வாய், மெய், முகம் ஆகியவற்றில் தன் அகக் குறிப்புகளைக் காட்டி நிறுத்துதல் இயல்புதானே. இத்துளய தமிழ்ச் சொல்லை நிர்த்தனம், நர்த்தனம் என்று பாழ்படுத்தி வடசொல்லாக மாற்றிக் கொண்டு வந்து கூறுவார் கூற்றைக் கேட்டுத் திரியும் தமிழ்த் தறுதலைகளை உதைத்தாலென்ன!” என்று கூறி எதிரிலிருந்த ஒலிப் பெருக்கியை எட்டி உதைத்தார். அது இன்னும் என மனக்கண் முன்னே காட்சியளிக்கிறது. - இத்தகைய உணர்ச்சிப் பெருக்கான மாநாட்டில் கலந்து கொண்டு ஊருக்குத் திரும்பிய எனக்குப் புதியதோர் உணர்ச்சி பிறந்தது. தமிழில் பிறந்த, மறைந்த இசைப்பண்களையெல்லாம் ஆய்ந்தறிந்து தக்கதோர் இசை வளம் தமிழுக்குப் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை ஆட்கொண்டது. நாங்கள் ஏறி வந்த புகை வண்டி கரூரைத்தாண்டிக் கொண்டிருந்தது. உள்ளத்தில் ஏற்பட்ட என் புதிய ஆவலைப் பாவேந்தரிடம் புகலத் தலைப்பட்டேன். "நானும் தங்களைப்போல் இசைப்பாடல்கள் இயற்றி இசைக்க ஒரு வழியைக் காட்டுங்கள்” என்றேன். பாவேந்தருக்குச் சிரிப்பு வந்தது. 'அடா! பாடகனெல்லாம் பாவலனாக மாறினால் இசையுலகத்தை யாரப்பா காப்பாற்றுவது? தமிழ்ப்பாட்டே தலையெடுக்காதிருக்கும் இந்தத் திரைப்பாட்டுக் காலத்தில், உன் வளரும் தமிழிசையை விடுத்துப் பாக்களத்தில் குதிக்கப் போகிறாயா? ஒரு துறையிலேனும் உருப்படியாகத் தேர்ச்சி கொள்; பிறகு பார்க்கலாம்” என்று கூறினார். ஊர் வந்ததும் என் அளவிட முடியாத உணர்ச்சி வெள்ளத்தில் எழுந்த ஒரு பாடலைப் பாவேந்தர்க்கு அனுப்பி வைத்தேன். அதிலிருந்து ஒரு சில சொற்களை அகற்றி அதனை அழகுபடுத்தி எழுதியனுப்பி இருந்தார்கள். ஒருமுறை இரண்டு வரி கொண்ட ஒரு பாடலை எழுதி அதை என் கடிதத்தாளில் (Letter Pad) அச்சிட்டு முதன் முறையாக அதில் பாவேந்தருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்குப் பாவேந்தரிடமிருந்து மறுமொழி வந்தது. என்ன? "உன் அஞ்சல் நன்று; உடன் அத்துணை அச்சுப்படிகளையும் எடுத்து வந்து சேருக" என்றிருந்தது. எப்படி இருக்கும்! உடன் எல்லாக் கடிதத் தாளையும் கட்டிக் கொண்டு புதுவை போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் வீட்டில் இல்லை. பதிப்பகத்தில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றேன்.