பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 275 சுலோசனா திரைப்படமாக எடுத்த நேரத்தில் திராவிட இயக்கம் வலுவாகத் தமிழ்மண்ணில் வேரூன்றிக் கொண்டிருந்தது. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியால் தமிழ் விரைந்து மறுமலர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருந்தது. இராவணன், இரணியன், இந்திரஜித் போன்ற இதிகாசப் பாத்திரங்கள் தமிழ் வீரர்களாக மக்கள் முன் நிறுத்தப்பட்டனர். மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர். சுந்தரம் இங்கிலாந்தில் படித்துப் பட்டம் பெற்றுத் திரும்பியவர்; ஆங்கில மாதைத் திருமணம் செய்துகொண்டு மேலை நாட்டுப் பாணியில் வாழ்ந்து கொண்டிருந்தவர். என்றாலும் அவருக்குத் தமிழ் இலக்கியங்களில் அலாதியான பற்றும் ஈடுபாடும் உண்டு. ஐம்பெருங்காப்பிய வரிசையைச் சேர்ந்த குண்டலகேசியையும், வளையாபதியையும் வெற்றித் திரைப்படங்களாக எடுத்து வெளியிட்ட பெருமை அவரையே சாரும். சுந்தரம் பிள்ளையின் மனோன்மணிய நாடகத்தையும் திரைப்படமாக்கினார். அன்று புரட்சிக்கரமாகவும், விறுவிறுப்போடும் எழுதிய கலைஞர் கருணாநிதியையும், கவிஞர் கண்ணதாசனையும் ஆதரித்து வளர்த்தவர் இவரே! இந்திரஜித்தின் வீர வாழ்க்கையை நல்லதோர் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்பதில் டி.ஆர்.எஸ். மிக்க ஆர்வம் காட்டினார். பாவேந்தரும் அப்படத்துக்கு உணர்ச்சி ததும்ப வசனம் எழுதியிருந்தார். வரலாற்றுக் கதாநாயகனாகவும், புராணக் கதாநாயகனாவும் பல படங்களில் நடித்துத் தம் திறமைக்கு முத்திரை குத்திக் கொண்டிருந்த சின்னப்பா இந்திரஜித்தாக நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று டி.ஆர்.எஸ். கருதினார். ஆனால் அவர் நினைத்தது நடைபெறவில்லை. சின்னப்பா மிகச்சிறந்த நடிகர், அவருக்கு ரிகர்ஸ்லே' தேவையில்லை. நடிக்க ஆரம்பித்தால் மளமளவென்று டேக் எடுத்து விடலாம். நடிக்க வரும்போது இளம் போதையில்தான் வருவார். போதை சற்று அதிகமாக இருந்து அவர் நடிப்பில் யாராவது குறுக்கிட்டால் தகராறு தான். அவர் நடிக்கும்போது நான் எப்போதும் அருகில் இருக்க வேண்டும். அடிக்கடி பி.யூ.சி. (பி.யூ.சின்னப்பாவின் சுருக்கம்) பி.யூ.சி. என்று சொல்லித் தட்டிக் கொடுத்து வேலை வாங்கிவிடுவேன். சுலோசனா படத்துக்குப் பாடல் ரெகார்டிங் ஆகிக்கொண்டிருந்தது. சர்வஜீவதயாபரனே என்ற பிலகரி ராகப் பாடலைச் சின்னப்பா பாடிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டது. டி.ஆர்.எஸ். கடுமையாகக் கண்டித்தார். கோபம் வந்துவிட்டால் பெரிய