பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 அவள்மேல் பழி காணும் குற்றங்களைச் சுட்டிக் காட்டினால் உடனே கோபப்படுவார்கள். அக்குற்றத்தை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். பாவேந்தர் அதற்கு நேர்மாறானவர். மாடர்ன் தியேட்டர்ஸ் செட்டில் உட்கார்ந்திருக்கும் போது அவருடைய திரைக்கதை வசனத்தைப் பற்றி அவரையும் வைத்துக் கொண்டு நாங்கள் விமர்சனம் செய்வதுண்டு. பொதுவாகப் பாராட்டித்தான் பேசுவோம். இரண்டோர் இடங்களில் குறையேதுமிருந்தால் அதையும் குறிப்பிடுவோம். சரி என்று பட்டால் உடனே அதைத் திருத்திக் கொள்வார். சுலோசனா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. தேவேந்திரன், வாயு, வருணன் முதலிய தேவர்களையெல்லாம் இந்திரஜித் பிடித்து வந்து இலங்கையில் சிறை வைத்தான். பிரம்மதேவன் இலங்கை வந்து இராவணனை நோக்கி, 'இராவனேஸ்வரா! தோல்வி அடைந்தவரின் வாழ்வைக் குலைப்பது மேல்வலி படைத்த வீரர்க்கழகல்லவே! அடைக்கலம் புகுந்தோரை ஆதரிப்பதல்லவா அரச தர்மம்? தேவேந்திரன் இல்லாவிட்டால் தேவலோகமே அழிந்துவிடும். என் பொருட்டாவது அமரேசனை விடுவித்து அளகாபுரியை அழியாமல் காப்பாற்ற வேண்டும்! என்று கேட்டுக் கொண்டார். பிரம்மாவாக சேலம் தேவராஜநாயுடு என்பவர். நடித்துக் கொண்டிருந்தார். அவர் இலக்கியங்களில் ஒரளவு ஈடுபாடு கொண்டவர். தேவேந்திரன் தலைநகர் அமராபதி. குபேரன் தலைநகர் அளகாபுரி. இந்த வேறுபாட்டை அறிந்த அவர் அளகாபுரி என்று இருப்பது தவறு என்று செட்டில் கூறிக்கொண்டிருந்தார். சிறிய சலசலப்பு அங்கு எற்பட்டது. "என்னய்யா அங்கே தகராறு?" என்று டி.ஆர்.எஸ். கோபத்தோடு வந்தார். பிரம்மாவை அடிக்கக் கையோங்கினார். அப்போது நாயுடு அவரைப் பார்த்து, "நான் நடிகனாயிருந்தால் படித்திருக்ககக் கூடாதா? நான் சொன்னதில் என்ன தவறு? வேண்டுமானால் பாவேந்தரையே கேளுங்கள்!” என்று கூறினார். அடுத்த கட்டிடத்தில் எழுதிக்கொண்டிருந்த பாவேந்தர் செட்டுக்கு அழைக்கப்பட்டார். நாயுடுவின் குற்றச்சாட்டைப் பற்றி அவரிடம் கூறியபோது அவர் சிறிதும் கோபப்படவில்லை. 'ஆமய்யா! ஆமய்யா!' என்று அன்போடு கூறியதோடு நாயுடுவையும் பாராட்டினார். பிறகு அளகாபுரி அமராபதி என்று திருத்தப்பட்டது. இதேபோலச் சுபத்ரா படப்பிடிப்பிலும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. சுபத்ராவின் திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் துவாரகையில்