பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 281 நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றை மேற்பார்வை செய்து கொண்டிருந்த பலராமன் அருகிலிருந்த அமைச்சரை நோகதி “என்ன? திருமண ஏற்பாடுகள் யாவும் செம்மையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவா?" என்று கேட்டார். அதற்கு அந்த அமைச்சன் “அரசே! பாட்டில் சிறந்த பாடகிகளையும், ஆட்டத்தில் சிறந்த அணங்குகளையும் மிக நீட்டாய் ஏற்பாடு செய்திருக்கிறேன். கேட்டால் கேளுங்கள், விட்டால் விடுங்கள்!' என்று பதில் சொன்னான். Neat என்பது ஆங்கிலச்சொல். பக்கத்தில் இருந்த நடிகர் ஒருவர் பாவேந்தரைப் பார்த்து, ஐயா! இராவணன் காலத்தில் நீட்" என்ற சொல் இருந்ததா? என்று கேட்டார். அதைக்கேட்டுப் பாவேந்தர் கோபித்துக் கொள்ள வில்லை; சிரித்தார்.