பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 293 விட ஏற்ற இடம் வேறு எதுவுமில்லை என்பதை உணர்ந்தேன். சுயமரியாதை இயக்கப் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். பெரியாரோடு நானும் கூட்டங்களுக்குப் போவேன். 'பாரதிதாசன் பாட்டைப் பாடு என்று ஐயா கட்டளையிடுவார்கள். இனிய குரல் வளம் பெற்றிருந்த நான் பாவேந்தர் பாடல்களைக் கணிரென்று மேடையில் பாடுவேன். அப்போது நான் பாடிய பாடல்களுள் கண்கள் நமக்குண்டு' என்று தொடங்கும் பாடல் எனக்கு மிகவும் விருப்பமான பாடல். ஒவ்வொரு மேடையிலும் நான் அதைத் தவறாமல் பாடுவேன். நீதிக்கட்சி தேர்தல் பிரசாரம் முடிந்து பெரியார் ஈ.வெ.ரா. கொடைக்கானலில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார். நானும், பூவாளுர் பொன்னம்பலனாரும், வேறு சில இயக்கத் தொண்டர்களும் கானாடு காத்தான் வை.சு. சண்முகம் செட்டியார் இல்லத்தில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தோம். அந்தக் காலத்தில் வை.சு சண்முகம் செட்டியாரைச் செட்டி நாட்டில் ராஜா சர் அண்ணாமலை செட்டியாருக்கு அடுத்த செல்வராகச் சொல்லலாம். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் அவருக்குப் பல கடைகள் இருந்தன. மலேயா வத்துப்பகாரில் 2000 ஏக்கர் பரப்புள்ள ரப்பர்த் தோட்டம் அவருக்குச் சொந்தமாக இருந்தது. கானாடுகாத்தானில் அவருக்குப் பெரிய வளமனை (Bangalow) இருந்தது. அதற்கு 'இன்பமாளிகை’ என்பது பெயர். அம்மாளிகையின் நடுவில் ஒரு பெரிய கூடம் உண்டு. அக்கூடத்தில் மிகப் பெரிய நிலைக்கண்ணாடி மாட்டப்பட்டிருக்கும். அக்கண்ணாடியின் எதிரில் ஒர் ஊஞ்சல் போடப்பட்டிருக்கும். அவ் ஊஞ்சலில் தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் அமர்ந்து கொண்டு 'பாண்டியா! என்று வை.சு.ச. வைக் கூப்பிடுவாராம், பாரதியார் புதுவையிலிருந்து மீண்டுவந்து கடையத்தில் தங்கியிருந்த போது மிகவும் வறுமையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். வை.சு.ச. அப்போது பாரதியாருக்குத் திங்கள்தோறும் ரூ.40/- தவறாமல் அனுப்பிக் கொண்டிருந்தாராம். வை.சு.ச. மீது பாரதியார் ஒரு பாடலும் எழுதியிருக்கிறார். வை.சு.ச. சுயமரியாதை இயக்கத்தின் பொருளாளர். சு. ம. 1. கைம்மைக் கொடுமை-என்பது பாடலின் தலைப்பு. பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியில் உள்ளது. 2. திருமதி மஞ் ச் சந்தித்துப் பாவேந்தர் பற்றி 咒 ங் கேட்டுக் கொண் கானாடுகாத்தானை விட்டுப் புறப்படும் நேரத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற அந்த இன்பமாளிகை இருந்த இடத்தைக் காணச் சென்றேன். அங்கு ஒரு மண்மேடு மட்டும் இநர் ந்காட்சி என் இதயத்தைச் சுட் - -