பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 தமிழ்த் தமையன் தொண்டர்கள் தெற்கு மாநிலங்களுக்குப் பிரசாரத்துக்குப்போனால் கானாடு காத்தான் இன்பமாளிகையில் தான் பொதுவாகத் தங்குவது வழக்கம். அது தான் அப்போது எங்கள் தெற்குக் கேந்திரம். வை.சு.ச. இளமையில் தேசியவாதி, காந்தியார் தென்னாடு வந்தபோது இன்ப மாளிகையில் இரண்டுமுறை தங்கியிருக்கிறார். காந்தியார் ஒருமுறை கூட்டத்தில் ஏலம் விட்ட ஒரு கெஜம் கதர்த்துணியை ரூ.10,000 கொடுத்து வாங்கினார். இன்ப மாளிகையில் இரண்டு கார்கள் எப்போதும் நின்று கொண்டிருக்கும். ஒருகாரை (Study Baker) பெரியாருக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார். இந்தி எதிர்ப்பின் போது அரசாங்கம் பெரியாரிடமிருந்து பறிமுதல் செய்த கார் அதுதான். நானும் இயக்கத்தோழர்களும் இன்பமாளிகையில் தங்கியிருந்த போது வை.சு.ச. ஒரு வழக்கின் பொருட்டு மலேயா சென்றிருந்தார். வை. சு.ச. வின் துணைவியார் பார்வதி அம்மாள் அப்போது நோய்வாய்ப்படடுப் படுத்த படுக்கையாக இருந்தார். அந்த அம்மையாரைக் கண்காணிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன், நோயினால் வருந்திக் கொண்டிருந்த அம்மையார் திடீரென்று ஒருநாள் உயிர் விட்டார். வை.சு.ச.விற்கு உடனே செய்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கானாடு காத்தான் வந்து சேரப் பத்து நாள் ஆகிவிட்டது. செட்டிநாட்டு முறைப்படி சமபந்தி விருந்து மிகவும் ஆர்ப்பாட்டமாகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது. பெரியார் விருந்துக்கு நேரில் வரவில்லை; கடிதம் மட்டும் எழுதியிருந்தார். வை.சு.ச. வந்த பிறகு அவருக்குத் துணையாக நானும் சில நண்பர்களும் கொஞ்ச நாட்கள் கானாடு காத்தானில் தங்கியிருந்து ஆறுதல் கூறினோம். மனைவியை இழந்த நிலையில், குழந்தைகளோடு தனியாக இருந்த அவருக்கு ஒரு பெண்துணை தேவைப்பட்டது. கொள்கையால் ஒன்றுபட்டிருந்த நாங்கள் இருவரும் நீண்ட நேரம் நன்கு சிந்தித்து வாழ்க்கையிலும் ஒன்றுபடுவது என்று முடிவு செய்தோம். நீதிக்கட்சிப் பிரமுகர் திருவாளர் செளந்திர பாண்டியன் முன்னிலையில் மதுரையில் எங்களுக்குப் பதிவுத் திருமணம் நடைபெற்றது. பாவேந்தர் பாடல்களில் எனக்கு இளமையிலிருந்தே ஈடுபாடு அதிகம். என் கணவர் ஏற்கனவே பாரதியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்; இலக்கியப் பற்று மிக்கவர். எனவே சுயமரியாதை இயக்கத்தின் இதயக் குரலாக, சங்கநாதமாக விளங்கிய பாவேந்தர் தொடர்பு எங்கள் குடும்பத்துக்கு இன்றியமையாததாகி