பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 301 பட்ட படிப்புப் படித்துக் கொண்டிருந்தாள். பாவேந்தரைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று பேச வைக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். கல்லூரியிலிருந்து அழைக்க வந்தனர். பிற்பகல் 4.30 மணி வரை மறுப்பு. அதற்கு மேல் ஒப்புக்கொண்டு பேசப் புறப்பட்டார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதி விழா. பாவேந்தர் என் வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அவரையும் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர். அப்பள்ளி ஆசிரியர் வி.ஜி. சீனிவாசன் பாவேந்தரை அழைக்க வந்திருந்தார். அவர் பாரதி மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவர். பாவேந்தரைச் சுற்றியிருந்த தி.க. நண்பர்கள் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஒரே பார்ப்பனக் கூட்டம். அங்கே போகாதீர்கள் என்று கூறிவிட்டனர். அவரும் மறுத்து விட்டார். சீனிவாசன் என்னிடம் வந்தார். என்ன?சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டீர்களா? பாரதி பணிசெய்த இடமாயிற்றே! என்று பாவேந்தரிடம் கேட்டேன். 'நான் மறுப்புச் சொல்லலையே! அவ்வளவு தூரம்... கூடப் பேசிக்கிட்டுப் போக ஆளில்லை. சரி வா!' என்று சொல்லிப் புறப்பட்டார். கூட்டத்திற்குப் பேராசிரியர்கள் ரா.பூரீ தேசிகன், ரம்போலா மஸ்கரனேஸ் ஆகியோர் வந்திருந்தனர். பாவேந்தர் உள்ளே நுழைந்ததும் ஒரே கரவொலி. மற்றவர்கள் பேச்சை நிறுத்திவிட்டனர். நான் கண்டபாரதி, என்பது இவர் பேசிய தலைப்பு. பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது. பாரதியை நேரில் கொண்டுவந்து தம் பேச்சில் நிறுத்தினார். மதுரை வந்தால் கார்மேகக் கோனாரைப் பார்க்கப் போவார். அவர் மேல் இவருக்குப் பற்று அதிகம், கோனாரும் இவரைப் பார்க்க வருவார். கோனாரைப் பார்க்கப் போகும் போது பழம், மாலை சகிதமாகத்தான் போவார். மாலையைப் போட்டுவிட்டுக் கோனாரின் கையைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொள்வார். ஒருமுறை மதுரையில் இருந்து வெளியான தமிழ்நாடு நாளிதழின் சார்பாக மலர் ஒன்று வெளியிட்டனர். அதற்குக் கவிதையொன்று வேண்டுமென்று பத்திரிகை சார்பில் கேட்பதற்கு டி.ஏ.வி. நாதன் வந்திருந்தார். தமிழ்நாடு பத்திரிகைக்குப் புதுவை ஏஜெண்ட் பாவேந்தரின் மகன் மன்னர் மன்னன். பத்திரிகைக்குச் சேரவேண்டிய தொகையை அனுப்பக் காலதாமதம் ஏற்பட்டதால் தமிழ்நாடு அலுவலகத்திலிருந்து ஒரு முறை வக்கீல் நோட்டீசு அனுப்பப் பட்டது. உடனே அத்தொகைக்கு 'செக்போட்டு அனுப்பும்படி மன்னர் மன்னனிடம் கூறினார் பாவேந்தர். அந்நிகழ்ச்சி அவர்