பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

undsvgһёй-sqьusовsceoёвұрғыһ 307 மூட்டை சுமப்பவன் பேருந்திலிருந்து இறங்கும் மக்களைப் பார்த்துக் "கூலி கூலி என்று கத்துகிறான். வெளிநாட்டுக்காரன் இதை எதிரிலிருந்து பார்த்தால் என்ன நினைப்பான்? வண்டியிலிருந்து இறங்குபவர்களைத் தான் கூலி என்று பெயரிட்டுக் கூப்பிடுவதாக நினைப்பான். ஆஸ்திகம் நாஸ்திகமானது இதைப்போலத்தான். நூற்றுக்கணக்கான டின் எண்ணெயும் நெய்யையும் ஊற்றி நாஸ்தி செய்து கார்த்திகைத் தீபம் கொளுத்துபவன் தான் நாஸ்திகன்’ என்றார் அவர். அத்திருமணத்தில் குடும்பக்கட்டுப்பாட்டை வற்புறுத்திப் பேசும் போது, "நான் திருச்சிராப்பள்ளியில் ஒரு தமிழறிஞர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்; குடிப்பதற்குத் தண்ணிர் கேட்டேன். வீட்டுக் குள்ளிருந்து அவருடைய பையன் தண்ணிர் கொண்டு வந்தான். குழந்தை எத்தனை? என்று நான் அவரைக் கேட்டேன். வீட்டில் கேட்டுச் சொல்கிறேன் என்றார். கேட்டதில் பத்துக்குமேல் இருக்கும் என்று தெரியவந்தது. மணமக்களுக்குச் சொல்கிறேன். இப்படிப் பிள்ளை பெறக்கூடாது. பெரியார் கர்ப்ப ஆட்சி' என்ற பெயரில் குடும்பக்கட்டுப்பாட்டைப் பற்றி நூல் எழுதியிருக்கிறார். மணமக்கள் இதைக் கடடாயம் படிக்க வேண்டும்!” என்றார். பின்னர் தமது தவிப்பதற்கோ பிள்ளை' என்ற பாட்டை நகைச்சுவையோடு விளக்கினார். "திருக்குறள்தான் தமிழர் பண்பாட்டு நூல். திருக்குறளின் அடிப்படையில் தமிழர் வாழ்க்கை நெறியையும் பண்பாட்டையும் வகுத்து அமைக்க வேண்டும். திராவிடர்க் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் சேர்ந்து முடிவு செய்தால் அதற்கேற்ப நான் குறளுக்குப் புதிய உரை எழுதுகிறேன்" என்று கூறி முடித்தார்.