பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 இரு துருவங்கள் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை பழுத்த சைவர்; ஆத்திகர். பாவேந்தர் பாரதிதாசன் பழுத்த சீர்திருத்தவாதி; நாத்திகர். என்றாலும் தமிழ் இந்த இருதுவங்களையும் இணைக்கும் பாலமாக இருந்து, இவர்கள் நட்பை வளர்த்து. கொள்கை வேறுபாடு எப்போதும் இவர்கள் குறுக்கே நின்றதில்லை. இத்திரு நீற்றுச் செல்வர் தம் உள்ளத்தில் பாவேந்தருக்காக ஒதுக்கியிருந்த இடத்தை நம் பார்வையில் படும்படி இக்கட்டுரையில் திறந்து காட்டுகிறார். என் சொந்தவூர் வடவார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒளவையார் குப்பம். நான் செய்யாற்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த நேரத்தில் பாவேந்தர் புதுவையில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். மயிலம் முருகன் பேரில் எனக்கும் ஈடுபாடு; அவருக்கும் ஈடுபாடு. அவர் மயிலம் முருகன் மீது சுப்பிரமணியர் துதியமுது பாடினார். நானும் முருகனைப் பற்றிப் பாடல் எழுதும் பண்புடையேன். மயிலம் கோவிலில் அவரும் நானும் சந்தித்து அளவளாவுவோம். நான் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நூலகராக இருந்து கொண்டு கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளையிடம் தமிழ் பயின் றேன். அப்போது பாரதிதாசனார் தஞ்சாவூர் வரும்போதெல்லாம் தமிழ்ச் சங்கத்துக்கு வருவார். எங்கள் நட்பு வளர்ந்தது. சுயமரியாதைக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் நான் செல்வதுண்டு; ஆனால் தீவிரமாகப் பங்கேற்பதில்லை. திருவாரூர்ச்