பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313 சொந்தச் சிந்தனையாளர் பென்னாகரம் நஞ்சையா திருவாளர் பென்னாகரம் நஞ்சையாவைத் திராவிட இயக்கத் தோழர்கள் நன்கறிவர். இவர் தருமபுரி மாவட்டப் பெரு நிலக்கிழார். நீதிக்கட்சிக் காலந் தொட்டுப் பெரியாருக்குத் தொண்டர் துணிச்சல்காரர். 1938ஆம் ஆண்டிலிருந்து பாவேந்தரிடத்தில் தொடர்பு கொண்டவர். கவிகாளமேகம் திரைப்படத்தை எடுத்த மோகினி பிக்சர்ஸ் உரிமையாளர்களுள் ஒருவர். சேலம் மாவட்டக் கழகத் துணைத் தலைவராகத் (Vice President Salem District Board) Gg5rtf5G5G#siliul Gli பல ஆண்டுகள் பணி புரிந்தவர். எனக்கும் பாவேந்தருக்கும் முதல் தொடர்பு 1938 எனக்கும் பாவேந்தருக்கும் முதல் தொடர்பு 1938ஆம் ஆண்டில் ஏற். பட்டது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த என் நண்பர்களெல்லாம் கூடி 'மோகினி பிக்சர்ஸ் என்ற பெயரில் ஒரு திரைப்படக் கம்பெனியைத் துவக்கிக் கவிகாளமேகம்' என்ற படத்தை எடுத்தோம். அக்கம்பெனியில் கீழ்க்கண்டவர்கள் பங்குதாரர்கள். 1) திருவாளர் டி. கிருஷ்ணமூர்த்தி (நீதிக்கட்சிப் பிரமுகர், சேலம் மாவட்டக் கழகத் தலைவர்) 2. திருவாளர் கனகசபாபதி உடையார் 3. திருவாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் 4. திருவாளர் டி.என். ராமன் 5. நான்