பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவு போற்றுவோம் பேராசிரியர் க. அன்பழகன் இவர் பேரறிஞர் அண்ணாவைப் போல அழுக்குப் படாத அரசியல்வாதி. நண்பர்களுக்கு இவர் ஷவர் பாத். பக்குவம் தெரியாதவர்களுக்குச் சுடு பாத்திரம். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்டு மந்தையில் முதன் முதலாக வெளிப்பட்ட இந்தச் சிறுத்தைப் புலி தன் புள்ளிகளை எப்போதும் மாற்றிக் கொண்டதில்லை. "பலர் பிறந்து பேசக் கற்றுக் கொள்கிறார்கள்; அன்பழகன் பேசிக் கொண்டே பிறந்து விட்டான் இது பாவேந்தரின் பாராட்டு. இளைய ஞானசம்பந்தன் என்பது பாவேந்தர் இவருக்குச் சூட்டிய செல்லப் பெயர். பேராசிரியர் அன்பழகனார் பாவேந்தர் பற்றிய தமது வாலிப நினைவுகளை இக்கட்டுரையில் வடித்திருக்கிறார். தமிழ் மொழி மறுமலர்ச்சி-கவிதை எழுச்சி ஆகியவற்றை உருவாக்கியவர் என்ற தகுதியால் தமிழ்நாட்டின் வரலாற்றில் தமக்கென ஓர் அழியாத இடத்தை, நீங்காத புகழ் ஒளியைப் பெற்ற பெருமைக்குரியவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் அன்னை பெற்றெடுத்த இணையற்ற கவிஞராக மட்டுமன்றி, ஈடற்ற புரட்சிப் பாவலராக, அஞ்சா நெஞ்சு படைத்த பகுத்தறிவுச் சிந்தனையாளராக விளங்கிய பாவேந்தரின் நினைவு நாள் (ஏப்ரல் 29 இல்) சித்திரைத் திங்களில் வருகிறது. அவரதுபொன்னுடல் மறைந்த நாள் 21.4.64 ஆகும். அவரது