பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அந்த IBIIIÉÍ 18–1–62 சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்ததும், முதலில் பாவேந்தர் நினைவுதான் எனக்கு வந்தது. சென்னைக்குப் புறப்படுவதற்கு முன் பாவேந்தருக்கு மிகவும் நெருங்கிய சேலம் நண்பரான திரு. சங்கரன் அவர்களிடத்தில் ஒர் அறிமுகம் கடிதம் வாங்கி வைத்துக் கொண்டேன். சென்னை சென்றதும் எனக்குக் கல்லூரி வேலைகளே சரியாக இருந்ததால், பாவேந்தரை நேரில் காணும் வாய்ப்புத் தடைபட்டுக் கொண்டே வந்தது. மேலும் பாவேந்தரைக் காணச் சென்று வந்த நண்பர் பலரும் அவரைப் பற்றிப் பலவிதமாகக் கூறுவர். எனவே என் உள்ளத்திலும் ஒருவித அச்சம் இருந்தது. நன்றாகப் பழகுவாரா? மாட்டாரா? என்று அடிக்கடி நான் எண்ணுவதுண்டு. கல்லூரியில் பொங்கல் விழா. அவ்விழா முடிந்து ஒரிரு நாட்கள் இருக்கும். மாலை 6 மணியளவில் சைதாப்பேட்டையிலிருந்து உந்து வண்டியில் புறப்பட்டுத் தேனாம்பேட்டையில் இறங்கினேன். அங்கிருந்து தியாகராயர் நெடுஞ்சாலையில் சிறிது தொலைவு சென்று உருசியத் தூதர் அலுவலகத்தருகே வலதுபுறமாகத் திரும்பினால் இராமன் தெரு உள்ளது. அத்தெருவில் பாரதிதாசன் பிக்சர்ஸ் என்று ஒரு பெரிய விளம்பரப் பலகை ஒரு பங்களா முகப்பில் தென்பட்டது. உடனே அந்த பங்களாவிற்குள் நுழைந்து விட்டேன். முன்னால் பெரிய வரவேற்பு அறையொன்று இருந்தது. அதில் மெலிந்த ஒற்றை நாடி உடம்புக்கார இளைஞர் ஒருவர் சுறுசுறுப்பாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், என்ன வேண்டும்? யாரைப் பார்க்கிறீர்கள்? என்று அவர் கேட்டார்.