பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 செட்டி நாட்டிலிருந்து சென்னை வரை. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் ஆயிரம் நூல்களை எழுதியவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அலக்சாண்டர் டுமாஸ். அப்பாதுரையார்-அந்த வரிசையில் அடுத்த எழுத்தாளர். சுருங்கச் சொன்னால் இவர் ஒர் எழுத்துப் பட்டறை! இவர்-சைவச் சுயமரியாதைக்காரர்; சுயமரியாதைச் சைவர்! அரசாங்கச் சலுகைகள் அறிவிக்கப்படாத காலத்திலேயே ஆர்வத்தால் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். எளிதில் யாரையும் மதிக்காத பாவேந்தரின் இதய மேடையில் இடம் பெற்ற அறிஞர். அன்பு வேளையில் அணுக்கத் தொண்டராகவும், ஆய்வு வேளையில் ஆலோசகராகவும் இருந்தவர். நெருங்கிய நீண்டநாள் நண்பர்! அன்பர்! பாவேந்தரின் முப்பரிமாணமும் அறிந்த மூதறிஞர்! இவர் எழுதியுள்ள இந்நுண்ணோக்காடிக் கட்டுரை பாவேந்தரை நமக்குப் பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டுகிறது. செட்டி நாடு வருகை 1943ஆம் ஆண்டில் நான் செட்டிநாடு கோனாப்பட்டில் ஆசிரியராகப் பணி செய்து கொண்டிருந்தேன். அவ்வூர் இளைஞரிடையே