பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 செட்டி நாட்டிலிருந்து சென்னை வரை.... திருவாளர் சோமசுந்தரம் செட்டியார், இரசிகமணி டி.கே. சிதம்பர நாதமுதலியார் குழுவைச் சேர்ந்தவர். பாரதிதாசன் கோனாப்பட்டுக் கூட்டத்தில் சைவத்தைக் கேலி செய்து பேசியதைக் கேள்விப்பட்டுப் கொதிப்படைந்தார். அடுத்தக் கூட்டத்தில் 'எங்க சிவனைக் குள்ளச் சிவன்! என்று ஒருவன் இழித்துப் பேசினானாமே!’ என்று பாரதிதாசனைச் சாடினார். பாவேந்தர் அப்போது செட்டி நாட்டில் தான் இருந்தார். கானாடுகாத்தானில் திருவாளர் வை.சு. சண்முகஞ் செட்டியார் இல்லத்தில் தங்கியிருந்தார். திரு.வை.சு.ச. அவர்களும், அவர் துணைவியார் மஞ்சுளாபாயும் பாரதிதாசனிடத்தில் அளவு கடந்த பற்றும், மதிப்பும் கொண்டவர்கள். பாரதிதாசன் செட்டி நாட்டில் தங்கியிருந்தபோது அவர் விரும்பிய போதெல்லாம், திடீரென்று எங்கள் இல்லத்துக்கு வருவார். தன்மான இயக்கத்தைச் சேர்ந்த ஒர் இளைஞர் பட்டாளம் எப்போதும் அவரைச் சூழ்ந்திருக்கும். என் மனைவி அலமேலு எல்லாருக்கும் விரைவில் விருந்து சமைத்துப் பரிமாறுவாள். பாரதிதாசன் கோனாப்பட்டில் தங்கியிருந்தபோது, வீரசுதந்தரம் வேண்டி நின்றார் என்ற பாரதியின் பாடலை, பாரதி எந்த ராகத்தில் எப்படிப் பாடினாரோ அதே ராகத்தில் உணர்ச்சி பொங்கப் பாடிக் காட்டினார். இப்போது பாடும் ராகம் தவறு என்று குறிப்பிட்டார். பாரதியைப் பற்றி மேலும் குறிப்பிடும்போது, “பாரதி பெரிய புரட்சிக்காரர். சீர்திருத்தச் செம்மல், பாரதியைப் பற்றி வைதீகச் சார்பான சில செய்திகளைப் பலர் கூறுவார்கள். அந்தக் காலத்தில் பாரதிக்குமேல் சீர்திருத்தவாதியாக வேறு யாரும் இருந்திருக்க முடியாது. அந்தக் காலத்துச் சமுதாயச் சூழ்நிலை அதற்கு மேல் இடங்கொடுக்கவில்லை. நானும் அப்போது அப்படித்தான் இருந்தேன். பாரதியைப்போல் நானும் அன்று பேராயக் கட்சிக் (Congress) காரன்; கதரைத் தோளில் சுமந்து விற்றவன். நானும் ஆத்திகன்; சுப்பிரமணியர் துதியமுது பாடியவன். அப்போது அவரிடத்திலும் தனித்தமிழ் இல்லை; என்னிடத்திலும் தனித்தமிழ் இல்லை. பாரதி படிப்படியாகச் சீர்திருத்தவாதியாகி மாறிவந்ததை நான் என் கண்ணாரக் கண்டேன். பாரதி உயிரோடிருந்திருந்தால் "சுய மரியாதைக்காரராக மாறியிருப்பார். என்னைப் போல் தான் பாடியிருப்பார்” என்று கூறினார் பாரதிதாசன். தொடர்ந்து பாரதியைப் பற்றிக் கூறும்போது, “பாரதிக்கு அழுத்தமான சீர்திருத்த உணர்வுண்டு, சில நேரங்களில் பார்ப்பனியத்தை வெளிப்படையாகவே எதிர்த்துக் கருத்துக்களைத் தெரிவிக்கத் தயங்க மாட்டார். பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த