பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i. ந்தர்-ஒருபல் o - 347 "மிகச் சிறந்தநூல்:தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ள நூல்!” என்று பாராட்டினார் பாரதிதாசன். இந்த நூல் கருத்தை மையமாக வைத்துத்தான் தமது தமிழியக்கத்தைப் பாட்டு வடிவில் பாரதிதாசன் எழுதினார். நான் எவ்வெத்துறைகளில் தமிழ் செழிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேனோ, அவற்றோடு திரைப்படம் போன்ற வேறு துறைகளையும் அவர் சேர்த்துக் கொண்டார். "வருங்காலத் தமிழகம்’ என்ற எனது வேறொரு நூலுக்குப் பாரதிதாசன் முன்னுரை எழுதியுள்ளார். அம்முன்னுரையில், திரு.க. அப்பாத்துரை தமிழ் வாழ்க’ என்று உரைநடையில் எழுதியதை நான் தமிழியக்கமாகப் பாட்டில் எழுதியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். "வருங்காலத் தமிழகம் என்ற நூலைப் பற்றிக் குறிப்பிடும்போது, அந்நூல் தொடர்பான வேறு சில செய்திகளையும் நான் கூறியாக வேண்டும். இந்த நூலையும், மு. வரதராசனார் எழுதிய கி.பி. இரண்டாயிரத்தையும் நூலாக வெளியிட்டவர் இயக்கத் தோழர் திருவாளர் சம்பந்தம் என்பவர். அவரைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். வருங்காலத் தமிழகம் நன்கு விற்பனையாயிற்று. ஆனால் இன்று வரை எனக்குப் பணம் வரவில்லை. இந்நூலை புரூஃப் பார்த்துத் திருத்தியவர் பாரதிதாசன். சந்திப் பிழைகளே இருக்கக்கூடாது என்பதில் பாரதிதாசன் மிகவும் கண்டிப்பானவர். சில செய்யுள் வரிகளில் முற்றுப்புள்ளிகள் வரும் இடத்தில் கூடச் சந்தி போட்டுத்தான் முற்றுப்புள்ளி வைப்பார். இலக்கணத்தைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறை விளங்கும். பாரதிதாசனின் தமிழியக்கமும் வேறு சில காப்பியங்களும் வெளியான பிறகு, மறைமலையடிகளைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. 'பாரதிதாசனின் தமிழச்சியின் கத்தி என்ற காப்பியத்தைப் படித்தேன். அழகிய தனித்தமிழ்க் காப்பியம்' என்று பாராட்டினார். பாரதிதாசனின் பிற்காலப் படைப்புகள் யாவும் தனித்தமிழில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளே பாரதிதாசனின் தனித்தமிழ் மலர்ச்சிக்குத் திருப்புமுனைகளாக அமைந்தவை. குயிலும் திருக்குறள் புத்துரையும் 1947-ஆம் ஆண்டில் பாரதிதாசனைச் சென்னையில் ஒருமுறை சந்தித்தபோது குயில் என்ற பெயரில் பாட்டிதழ் ஒன்று தொடங்க இருப்பதாகவும், அதில் செய்திகளும், விளம்பரங்களும் கூடப்