பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 செட்டிநாட்டிலிருந்துசென்னை வரை. தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஆனால் அக்குழுமம் பின்னர் இயங்கவில்லை. அண்ணாவுக்கும் பாரதிதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் முன்பும் இருந்தன; அப்போதும் இருந்தன. தி.மு.கழகத்திற்குள் தமிழ் வளர்ச்சிக்கென்று தனிக்குழுமம் அமைப்பது, கட்சிக்குள் கட்சியாகி விடுமோ என்று அண்ணா கருதியிருக்கலாம். அண்ணா நுண்ணிய அரசியல் அறிஞர். அரசியல் நோக்கில் அண்ணாவின் கருத்துச் சரியே. தமிழ் வளர்ச்சியைத் தி.மு.க. தனது உயிர்த் துடிப்பாகக் கொண்டிருக்கும்போது, தமிழ் வளர்ச்சிக்கென்று தனி அமைப்புத் தேவையில்லை என்பது அண்ணாவின் கருத்து. தமிழ் வளர்ச்சிக் குழுமத்தை இயக்குவதற்கும், அதற்குச் சட்ட திட்டங்களை வகுக்கவும் விரும்பிய பாரதிதாசன் அண்ணாவின் கருத்தையறிந்துவர என்னை அனுப்பினார். நான் அண்ணாவை அணுகிப் பாரதிதாசன் கருத்தைச் சொன்னேன். தமிழ் வளர்ச்சிக் குழுமக் கூட்டத்துக்கு அண்ணா வரமறுத்துவிட்டார். நாவலர் நெடுஞ்செழியனையும் போக வேண்டாம் என்று கூறித் தடுத்து விட்டார். அண்ணாவின் விருப்பமின்மையை நான் பாரதிதாசனிடம் வந்து சொன்னேன். 'நமக்குத் தி.க.வும் வேண்டாம். தி.மு.க.வும் வேண்டாம். தமிழர்க்கென்று தனிக்கழகம் ஒன்று அமைப்போம்; நீ வந்து விடு” என்று சொன்னார். 'நீங்கள் அமைக்க விரும்பும் தனித்தமிழ்க் கழகத்துக்கு என் ஒத்துழைப்பு (Moral support) என்றும் உண்டு; ஆனால் நான் அதில் அங்கம் வகிக்கமாட்டேன். தமிழ், தமிழ்ப் பண்பாடு ஆகிய உயரிய கொள்கைகளைப் பரப்புவோம்; ஆனால் தி.க.வையோ, தி.மு.க.வையோ திட்டக்கூடாது" என்று நான் சொன்னேன். தமிழ்த் தேசிய கட்சியைச் சம்பத் துவக்கியபோதும் நான் இக்கருத்தைத் தான் வற்புறுத்தினேன். அவர்கள் அதன்படி நடக்கத்தவறியதும் நான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன். பாரதிதாசன் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தி.மு.க.வின் மேல் இருந்த வெறுப்பின் காரணமாக அவர் பேராயக் கட்சிக்குக் (Congress) sa L_3: சென்றுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். பேராயக் கட்சிக்காரராகத் தேர்தல் மேடைகளில் பேசிப் பேராயக் கட்சிக்காரராகவே இறந்தார் என்றும் கேள்விப்பட்டேன். அவர் இறந்த போது, கதர்க்கொடியால் மூடித்தான் அவர் பிணத்தை எடுத்ததாகக் கூறினார்கள். எந்த அளவு உண்மை அது என்று எனக்குத் தெரியாது.