பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அந்தநாட்கள் கவிஞர் உங்களைப் பற்றி எழுதிய பாடலையும் சேர்த்திருக்கிறேன்" என்று சொல்லி அப்பாடலைப் படித்துக் காட்டினேன். "பாடல் சரியான இடத்தில்தான் இருக்குது. ஆமா இதை எப்படி விட்டானுங்க! அப்ரூவ் ஆயிடுச்சா? விடமாட்டானுங்களே!” என்று வியப்போடு கேட்டார். "அப்ரூவ் ஆகிவிட்டது; பல பள்ளிகளிலும் பாடமாக வைத்திருக்கிறார்கள்" என்று நான் சொன்னேன். அவர் என்னை மகிழ்ச்சியோடு பார்த்தார். "நான் உங்கள் மீசையைப் பற்றிப் பத்து எண்சீர் விருத்தம் எழுதியிருக்கிறேன்” என்று சொன்னேன். "ஏன்?" என்றார் பாவேந்தர். "இங்கிலாந்தில் வொர்ட்ஸ்வொர்த் என்ற கவிஞர் வாழ்ந்தபோது அவன் மூக்கைப் பற்றிக் கவிதைபாடிச் சிறப்பித்தார்கள். கீட்சின் தலைமுடி பொன்னிறமானதா? கருநிறமானதா? என்று ஆராய்ச்சி நடத்தினார்கள். இந்த நூற்றாண்டின் இணையற்ற கவிஞராகிய உங்கள் மீசையைப் பற்றி ஒரு கவிதை பாடினால் என்ன என்று எண்ணினேன்; எழுதினேன்" என்று நான் சொன்னேன். அப்படியா! எங்கே படி!" நானும் படித்தேன். அந்தப் பத்து எண்சீர் விருத்தத்தையும் பொறுமையோடு கேட்டுவிட்டுக் 'கற்பனை யெல்லாம் ரொம்ப நல்லா இருக்குது... ஆமா... சாப்பிட்டாயா" என்றார். 'இல்லை ஐயா. நான் கல்லூரி விடுதிக்குச் சென்று சாப்பிட்டுக் கொள்கிறேன்" என்றேன். உடனே தாயாரு? தாயாரு!’ என்று சமையற்காரியை அழைத்தார். தாயாரம்மாள் என்பது அந்த அம்மையார் பெயர். "ஆமா! நீ புலால் சாப்பிடுவாயா?" என்று கேட்டார். "சாப்பிடுவேன்” என்றேன் நான். "கறியை விடாதே. கறிதான் மனிதனுக்கு உணர்ச்சி வெறியை உண்டாக்குது. உணர்ச்சி வெறிதான் கவிஞனுக்கு வேண்டும். கடைசி வரையிலும் கறியை விடக்கூடாது. நான் அதுக்கு எடுத்துக்காட்டு. என்ன?’ என்று கூறிவிட்டு என்னைப் பார்த்தார். - 1 காண்க; பிற்சேர்க்கை-1