பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

undsvgһёй-&sugosaveoёвұрғы? 357 பாடிட்டா... முண்டம்! இதை மாணவருக்குப் பாடமா வேற வெச்சிட்டானுக... இந்த நாடு உருப்படுமா?” என்று விளாசித் தள்ளி விட்டார். அங்கு அமர்ந்திருந்த பக்தர் கூட்டத்தில் சலசலப்பு. பாவேந்தர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. கூட்டம் முடிந்தது. தலைமையாசிரியர் முகத்தில் ஈயாடவில்லை. ஒரு வாரத்தில் தலைமையாசிரியர் சத்தியதாஸ் காட்டு மன்னார் குடியிலிருந்து திருக்கோவிலுர் மாற்றப்படடார். இச்செய்தியை அறிந்து நான் மிக வருந்தினேன். அடுத்தமுறை நான் பாவேந்தரைச் சந்தித்தபோது, "என்ன... இப்படிப் பண்ணிட்டீங்க... உங்க பேச்சோட எதிரொலி... பாவம்... சத்தியதாஸ். புள்ளை குட்டிக்கார... அவனைத் திருக்கோவிலுர் மாத்திட்டாங்க!” என்று வருத்தத்தோடு சொன்னேன். அதற்குப் பாவேந்தர் சிரித்துக் கொண்டே "இப்ப என்ன அதுக்கு? சத்தியதாளைத் திருக்கோவிலூர் பள்ளியிலேயே ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க... நான் அங்கே போய்ப் பேசற... தானா திருக்கோவிலுரிலிருந்து காட்டுமன்னார்குடி மாத்திட்டுப் போறா..." என்றார் அவர். எப்படி பதில்? அவர்தான் பாவேந்தர்.