பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 பாவேந்தருடன் டாக்க வேண்டும் என்று அவர்கள் பாவேந்தரைக் கேட்டுக் கொண்டனர். 1928 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். புதுச்சேரியில் நடிகர் எம்.ஆர்.ராதா நாடகக் குழுவினர் இரண்டு மாதங்கள் தங்கித் தொடர்ந்து நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது பாரதியாரின் நினைவுநாள் வந்தது. செப்டம்பர் 11 ஆம் நாள் மாலை ஆனந்தரங்கம் பிள்ளை இல்லத்தில் பாரதி விழா நடை பெற்றது. பாரதிதாசன் தலைமை தாங்கினார். நாடகக் கலைஞர்களும் பாரதி விழாவிலே கலந்து கொண்டு பக்க வாத்தியத்துடன் பாரதி பாடல்களைப் பாடினர். பாரதிதாசனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆனால் பாரதி பாடல்களை அவர்கள் பாடிய முறை இவருக்குப் பிடிக்கவில்லை. 'பாரதியார் எப்படிப் பாடுவார் தெரியுமா?’ என்று கேட்டு விட்டு அவரே பாட ஆரம்பித்தார். பக்தியினாலே தெய்வப் பக்தியினாலே என்ற பாட்டு: சபை ஆழ்ந்த அமைதிக்குச் சென்றது; சிறிது நேரத்தில் உணர்ச்சி மயமாகியது பாவேந்தரின் குரல் கணிரென்றிருக்கும். பக்தியினாலே என்று பிலகரி ராகத்தில் மேல் நிலையில் சிறிது நேரம் நிறுத்துவார். அப்போது குரலில் ஒரு ரவை பறக்கும். அந்த நாத ஒலியில் ஒரு மத்தாப்பு வெடிக்கும். அதற்குப் பின்பு இரண்டொரு முறை அவர் பாடக் கேட்கும் வாய்ப்பு எனக்கிருந்ததுண்டு. ஆனால் என் நினைவில் பசுமையாக இருப்பது, 1928 செப்டம்பர் 11 இல் ஆனந்தரங்கம் பிள்ளை இல்லத்தில் அவர் பாடக் கேட்டதுதான். அது போல் மற்றைய நாள் பாடல்களைச் சொல்ல முடியாது. 1930-31இல் பாவேந்தருக்குச் சம்பளம் சுமார் அறுபது ரூபாய்தான். கடன் மற்றுமுள்ள பிடித்தங்கள் போக ஒருமுறை ரூ. 34/- தான். கைக்கு வந்தது. அவருக்குச் சம்பளம் வரும்நாள் என்று சிலருக்கு வாசனை அடிக்கும். கலகலப்பாக அவர் முன்வந்து நிற்பார்கள். திருவாளர்கள் பச்சையப்ப உடையார், கந்தசாமி ஆச்சாரி, எம்.என்.சாமி முதலியோர் பெரும்பாலும் வாடிக்கைக்காரர்கள் போல. இவருக்குக் கிடைக்கிறதோ ரூ.34/= இதில் வாடிக்கையாக உதவிகள் செய்வது அவர் இயல்பு. பச்சையப்ப உடையார் என்பவர், தாளத்தில் வல்லவர். 108 தாளங்களிலும் தமக்குப் பயிற்சி உண்டு என்று சொல்லுவார். பாவேந்தரும் அவரது தாளஞானத்தில் அதிக மதிப்பு வைத்திருந்தார். எம்.என்.சாமி என்பவர் சிறந்த நடிகர்; நடிப்புக்கலை அவரிடம் கைகட்டி நிற்கும். பத்துப் பதினைந்து பேரே கூடியுள்ள சபையில்