பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 பாவேந்தருடன் பேசறவனோட நான் ஒத்து இருப்பேனா? அந்தச் செல்லான் நாயக்கர் ஒணனும் பூதமல்ல, ஒரு வேளை அவர் ஆட்சிக்கே வந்துட்டா, அந்த ஆட்சியை 24 மணி நேரத்தில் கீழே இறக்கிவிட எங்கிட்ட சரக்கிருக்குது” என்று ஆவேசப்பட்டுப் பேசினார் பாவேந்தர். பிறகு சில தினங்கள் கழித்துக் கூப்பிட்டனுப்பினார். சினிமாவுக்குப் பாட்டெழுத ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. டி.கே. சண்முகம் கம்பெனியார் படம் எடுக்கிறார்கள். "நீ வர்ரியா? வாயேன். இவ்வளவு நாள் சிறையில் கிடந்தையே! வா போயிட்டு வருவோம்" என்றார்; சரி என்றேன். அடுத்த இரண்டு தினத்தில் புறப்பட்டோம். ஈரோட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பாட்டெழுத வேண்டிய படம் பாலாமணி அல்லது பக்காத் திருடன்! பெரியா ருடைய வீட்டில் பத்துப் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தோம். பல தினங்கள் காலை எழுந்தவுடன் பெரியாரைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர் ஊரில் இல்லாத நாட்களில்தான் பார்க்க முடியாது. பெரிய வாசலில் ஒர் ஒரத்தில் உட்கார்ந்து, அவரது பற்களைக் கழற்றிச் சுத்தம் செய்து கொண்டிருப்பார்; மிகவும் சுறு சுறுப்பாக இருப்பார். “வாங்க வாங்க! வாங்க ஐயா! நல்லா தூக்கம் வந்துதா? ஒன்னும் அசெளகரியமில்லையே! படம் புடிக்கறாங்களா?" என்று பரிவோடு பாவேந்தரை விசாரிப்பார் பெரியார். பிறகு, தமது தங்கையை அழைத்து, ஐயா பாரதிதாசன் வந்திருக்காங்க என்பார், பாவேந்தரும் யாரிடத்திலும் காட்டாத அடக்கத்தோடும், மரியாதையோடும் நடந்து கொள்வார். மற்றவர் யாரானாலும் பாவேந்தர்தான் முன்னே பேசுவார். பெரியார் ஒருவரிடம் மட்டுந்தான்.அவர்பேசட்டும் என்று பெளவியத்தோடு காத்திருப்பார். பெரிய குடும்பத்தில் தந்தையாரிடம் சிறு பிள்ளைகள் பேசும்போது, அன்பும் பாசமும் பக்தியும் கொந்தளிக்குமே அதுமாதிரி இருக்கும். இலை போடுவார்கள். பெரியார் உட்காருங்கோ! என்பார். ஒன்றும் பேசாமல் சாப்பிடுவோம். காலை ஆறு மணிக்கே எங்கள் காலைச் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்படும். பாவேந்தர் இரவில் எவ்வளவு நேரம் விழித்திருந்தாலும், எழுவது மட்டும் அதிகாலையில் எழுந்து விடுவார். காலையில்தான் மிகத் தெளிவாக இருப்பார். எதையும் மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டே சில சமயங்களில் படுக்கை யிலே உட்கார்ந்து கொண்டு தலையணை ஒன்றை முன்பக்கம் வைத்துக் கொள்வார். எதையோ நோக்கிக் கொண்டிருப்பார். பேசுவதில் கூடத் தனி மகிழ்ச்சி தென்படும். பாட்டெழுதுவதும்