பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ыпсальей-евывозаосоварыb 371 செல்வோம். கதையில் எந்தெந்த இடங்களில் பாட்டு வேண்டும் என்று ஷண்முகம் சொல்வார்; மெட்டையும் பாடிக் காட்டுவார். ஐந்தே நிமிடங்களில் பாட்டு தயாராகிவிடும். டி.கே.எஸ் மகிழ்ச்சியில் திகைத்து நிற்பார். ஒத்திகையின் போது பாட்டின் அழகுதான் எல்லாருடைய வாயிலும் அடிபடும். பாரதிதாசன் சினிமாவுக்குப் பாட்டெழுதுவது அதுதான் முதல் தடவை. ஒரு நாள் படம் எடுக்கும் காட்சியைப் பார்க்க என்னை அழைத்துப் போனார். அடிபட்ட ஒருவர் ஆற்றில் உருண்டுவரும் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தனர். அக்காட்சியில் நடித்தவர் திரு. சகஸ்ரநாமம். அவருக்கும் அதுதான் முதற்படம். அவரது நடிப்பைப் பாவேந்தர் மிகவும் பாராட்டினார். அந்தப் படத்தின் இயக்குநர் திரு.ராவ் என்பவர்; நல்ல திறமை வாய்ந்தவர். ஒத்திகையின் போது அவர் நடித்துக் காட்டியதைக் கவிஞர் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார். திரு. ராவ் ஒரு நல்ல குடியர். ஒத்திகையில் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை உள்ளே போய் ஒரு கோப்பை குடித்துவிட்டு வருவார். பாரதிதாசனுக்கு அதைப் பொறுக்க முடியவில்லை. என்னப்பா இவன் இப்படிக் குடிக்கிறான்? என்று அவர் எதிரிலேயே கூறினார். ஏதோ ஒர் இரண்டாந்தர நடிகை தனக்குப் படத்தில் பாட்டுவேண்டும் என்று பிடிவாதம் செய்தாள். பாவேந்தர் இந்தப் பெண்ணுக்குப் பாட்டு நன்றாயிருக்காது’ என்றார். உண்மைதான்! என்ன செய்வது? இந்த டைரக்டரின் பரிவு அவளுக்கு அதிகம்; அதனால் பிடிவாதம் செய்கிறாள். நீங்கள் பாட்டை எழுதிக் கொடுத்து விடுங்கள் என்றார். டி.கே.சண்முகம். அப்போ, படம் கண்றாவியா இருக்கும் என்றார் பாவேந்தர். "அந்தப் பாட்டைப் பின்னால் வெட்டி விட்டால் போகிறது. அவசியமானால் அவள் சம்பந்தப்பட்ட காட்சி முழுவதையுமே வெட்டிவிட வேண்டியது தான்” என்றார் சண்முகம். அதைக் கேட்டதும் மனத்தில் சிறிது வேதனை அடைந்தார் பாவேந்தர். 'பார்த்தியா சினிமா உலகம் எப்படியிருக்கிறது? எவ்வளவு செலவழித்துப் படம் எடுக்கிறான்! பின்னர் முழுவதையும் வெட்டி விடலாம் என்கிறானே! எத்தனை ஊதாரித்தனம்" என்று கூறி வருந்தினார். ஒரு நாள் பாரதிதாசன் அவர்களிடம் ஐம்பது ரூபாய் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதைப் பெற்றுக் கொண்டு நானும் அவரும் தனியே