பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல் e - 375 தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள உரிமைகோருவது தான். தொழிற்சங்கம் அமைக்க முன் வருபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் வகையான சட்ட அமைப்பு அன்றையப் புதுவை அரசியலில் இருந்தது. அந்தச் சட்டத்தை எதிர்த்து, மீறித் தொழிலாளர் ஒன்றுபட்டு அப்போது போராட்டம் நடத்தினர். 1936-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடத்திக் கொண்டிருந்த தொழிலாளர் மீது, வெளியிலிருந்த போலீசார் யந்திரத் துப்பாக்கியால் சுட்டனர். அத்துப்பாக்கிச் சூட்டில் 15 பேர்கள் உயிரிழந்தனர். ஆலையும் தீப்பற்றி எரிந்தது. மக்களும் தொழிலாளர்களும் கொதிப்பான மனநிலையில் இருந்தனர். டிசம்பர் மாதத்தில் தாவீது என்பவர் சுடப்பட்டார். அரசியல் கண்ணோட்டத்தில் அந்நிலையில் தோழர் வ.சுப்பை யாவும், வழக்கறிஞர் சவரிநாதனும் தொழிலாளர் சார்பில் பாரிஸ் சென்று பிரான்ஸ் நாட்டு அமைச்சரவையை அணுகினர். இவர்கள் பாரிஸ் சென்று திரும்பியதன் பயனாகப் புதுவைக்குத் தொழிற்சங்க உரிமைகள் கிடைத்தன. பிரான்ஸ் நாட்டு முன்னேற்ற மான தொழிற்சட்டங்களும் இங்கு அமுல்படுத்தப்பட்டன. மேற்படி சட்டங்களின் நகல் ஒன்றைத் திரு. சுப்பையா பாரிஸிலிருந்து அனுப்பி வைத்தார். பிரெஞ்சு மொழியில் இருந்த அதனைப் புதுவைத் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள ஆவல் கொண்டனர். அப்போது இரவு பகலாகக் கண்விழித்துப் பாவேந்தர் அதனைத் தமிழாக்கிக் கொடுத்தார். இப்பணியில் திருவாளர் ராமாநுஜம், வாத்தியார் கண்ணுசாமி ஆகியோர் உடனிருந்து உதவி புரிந்தனர். சட்டத்தைத் தமிழில் செய்தால் அது வறட்டுப் பாறையாக இருக்கும். ஆனால் பாரதிதாசன் தமிழாக்கம் செய்ததால் அது தனிச்சுவையோடு இருந்தது என்பேன். அரும்பாடுபட்டுக் கிடைத்த அந்த உரிமையை மக்களுக்கு வழங்குவதில் அவருக்கு அளவிலாத மகிழ்ச்சி. பாரீஸ் பயணம் முடித்து திரு. சுப்பையா ஜூலை மாதத்தில் புதுவை திரும்பினார். அப்போது ஒர் அற்புதமான வரவேற்புக் கவிதை எழுதித் தந்தார் பாவேந்தர். "அழிவார்கள் என்றிருந்த அந்த நிலைமாற்றித் தொழிலாளர் என்ற நிலைக்குக் கொண்டு வந்தாய்” என்பது அப்பாட்டில் ஒரு வரி. அவரது உள்ளப் பூரிப்பை அந்த வரவேற்பில் காண முடிந்தது. சக்தி வாய்ந்த போராட்டமும், அதனை அடக்க அரசு எடுத்த கடுமையான அடக்குமுறையும், துப்பாக்கிச் சூடும், மக்களின் மகத்தான தியாகமும் சிறிய புதுச்சேரியில் புதிய புரட்சிச்