பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

исеміві-Souёosoco&apsib 377 படிந்திருந்தது.) என்று கேட்டார். நான் களைப்பாகவும் இருந்தேன் குளிர்நதபானம் கொண்டு வரச் சொல்லி கனிவோடு குடி குடி' என்றார். என்னா இப்படியெல்லாம் அலையறே! என்று என் அருகில் குனிந்து என்ன பணம் கிணம் இல்லையா? வெட்கப்படாதே! இதோ!' என்று எதிரே கிடந்த குவியலைக் காட்டி உனக்கு வேண்டியதை எவ்வளவேனும் எடுத்துக்கப்பா!' என்றார். நான் பரவசமானேன். என் கையைப் பிடித்துப் பணத்தின் பக்கம் நகர்த்தினார். மறுபடியும், உனக்கு வேண்டியதை எடுத்துக்கப்பா என்றார். அவரின் மனம் நான் நன்றாய் அறிந்தது-வார்த்தைகள் வெறும் உபசாரமல்ல-உண்மையிலேயே நான் ஏதாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். எனது களைப்பான முகமும் எனது இயற்கைக்கு மாறானது.சி படிந்த ஆடைகளுமே அவரின் மனதை வேதனை அடைய வைத்தன போலும். பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் எழுந்து கொண்டார்கள். பாவேந்தரின் மனதிற்கு, நான் இவ்வளவு உகந்தவன் என்று அவர்கள் கண்டதுதான் அவர்களை எழுந்து நிற்கச் செய்தது. எனக்கு அப்போது பணம் ஒன்றும் தேவையில்லை என்று அவரிடம் சொல்லி விடை பெற்றுக் கொண்டேன். பாருப்பா இந்தப் பிள்ளை, என்று அங்கிருந்தவர்களிடம் சொல்கிறார். நான் அந்த இடத்தை விட்டு அகன்றேன். 1961ஆம் ஆண்டு சென்னை ஆண்டர்சன் ஹாலில் தமிழ்ப் பயிற்சி மொழி மாநாடு நடந்தது. திருவாளர் சக்தி சீனிவாசன் (இப்போது A.I.R.இல் இருக்கிறார்) தான் ஏற்பாடுகள் யாவும் செய்தார். டாக்டர். மு. வரதராசனாரும் பாவேந்தரும் பேச வேண்டியவர்கள். ஏராளமான கல்லூரி மாணவர்கள் பேச முன் வந்தனர். இந்த இரு பெரும் அறிஞர்கள் பேசும்போது நான் தலைமை வகிப்பது எனக்கு வெட்கமாயிருந்தது. என் மனநிலையை உணர்ந்து கொண்ட பாரதிதாசன் என் பக்கத்தில் அமர்ந்தார். "பரவாயில்லை, பரவாயில்லை. நான் இருந்தால் என்ன? நீ பாட்டுக்குப் பேசு' என்றார். டாக்டர் மு.வ. பேசி முடித்தார். அடுத்துத் தாம் பேசிவிட்டுப் போய்விட வேண்டும் என்றார் பாவேந்தர். மாணவர் பலர் பேச வேண்டும் என்று உற்சாகமாயிருந் தனர். இவர் பேசி முடித்தால் கூட்டம் கலைந்துவிடும். நீங்கள் கடைசியாகப் பேச வேண்டும்’ என்று சொல்ல எனக்குத் துணிவில்லை. பாவேந்தரின் மகன் மன்னர் மன்னன் பக்கத்தில் இருந்தார். அப்பா பேசிவிட்டால் கூட்டம் கலைந்துவிடும்;