பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 பாவேந்தர்-ஒருநினைவுச்சரம் பட்டம் வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் நாவலர் சோமசுந்தர பாரதியார். அவர் பட்டம் பெற்றபோது பட்டமளிப்பு விழா மன்றத்தில் எழுந்த கரவொலியும் மகிழ்ச்சி ஆரவாரமும் அடங்க நெடு நேரமாயிற்று. இந்நிகழ்ச்சி, அந்நாள் தமிழக ஆளுநராக இருந்த பூரீ பிரகாசாவுக்குப் பெரும் வியப்பை உண்டு பண்ணியது. இதனால் நாவலர் பாரதியாரைக் கெளரவிக்க இரண்டொரு மாதம் கழித்து மற்றொரு விழாவைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. அவ்விழாவுக்கு நாவலர் பாரதியாருடன் ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ. ஆகியோரும் பாவேந்தர் பாரதிதாசனும் அழைக்கப் பட்டிருந்தனர். பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் பாவேந்தர் தங்கியிருந்தார். மாணவர் கூட்டம் அவரை மொய்த்துக் கொண்டது. அப்போது நான் ஆசிரியராகவும், ச. மெய்யப்பன் துணை ஆசிரியராகவும் இருந்து நடத்தி வந்த முத்தமிழ் மலர் கையெழுத்து ஏட்டினை அவர் பார்வைக்குப் பணிவுடன் கொடுத்தேன். மாணவர்களின் ஒவிய வண்ணமும், காவிய நேர்த்தியும் பார்த்து மகிழ்ந்து நறு மலர் இஃதே' என்று எழுதிக் கையொப்பமிட்டுத் தந்தார். மற்றொரு மாணவர் தயாரித்த மலரை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது அதன் ஆசிரியரான மாணவர், ஒரு பாராட்டுக் கவிதை எழுதித்தர வேண்டினார். பாவேந்தர் ஒன்றும் பேசவில்லை. மீண்டும் மீண்டும் அம்மாணவர் வற்புறுத்திக் கேட்டதும் இரண்டு வரிகள் எழுதினார். பிறகு அந்த மாணவரை ஏறிட்டுப் பார்த்து இதற்குப் பொருள் சொல் என்று கர்ஜித்தார். பயந்து நடுங்கிப் போன பையன் ஏதோ சொன்னான். 'மூணாவது சீரிலே மோனை சும்மாவா போட்டிருக்கேன் என்று முழங்கியதும் அந்த அறை நிசப்தமாகி விட்டது. நல்ல வேளையாக அதற்குள் மற்ற அறிஞர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள யாரோ கவிஞரை அழைத்தார்கள். அவர் வரமுடியாது என்று மறுத்தார். இதைக் கேள்விப்பட்டு உடனே அந்த அறைக்கு தெ.பொ. மீயே நேரில் வந்து கவிஞர் இல்லாமல் புகைப்படமா? என்று கூறி அவரை அழைத்துச் சென்றார். அக்காட்சி உணர்ச்சிவயமாக இருந்தது. பாராட்டு விழாவில் பாவேந்தர் ஒரு நெருப்புச் சூறாவளியாகப் பேசினார் என்று மட்டுமே இப்போது நினைவில் நிற்கிறது. >k அடுத்த முறை நான் பாவேந்தரைக் கண்டது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தியாகராய நகரில் அவர்