பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 பாவேந்தர்-ஒருநினைவுச்சரம் தொடர்ந்து கருத்தரங்கம் நிகழ்ந்தது. பிற்பகல் இசை நிகழ்ச்சி, சிறப்புச் சொற்பொழிவுகள், ரஷ்யப் பெண்மணி இசபெலலாவின் உரை. பாவேந்தர் தம் உரை நிகழ்த்தக் காத்திருந்ததில் ஒரளவு பொறுமை இழந்து போயிருந்தார். இதனிடையே அவருக்கு முன்பே அறிமுகமாயிருந்த சிலர், ஆளியாறு அணைக் கட்டுக்குப் போய் வந்துவிடலாம் என்று அவரை விழாவைவிட்டு அழைத்துப் போய்விடத் திட்டமிட்டனர். விழாப் பொறுப்பாளர்களான எங்களுக்குக் கிடைத்தற்கரிய நிதி கை நழுவிப் போய்விடக் கூடாதே என்ற அச்சம் வந்து விடடது. அதனால் மற்ற பேச்சாளர்களை விரைவுபடுத்தினோம். எனினும் இரவாகி விட்டது. பாவேந்தர் பேசத் தொட்ங்கும்போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். அப்படியொரு கூட்டத்தை, ஓர் இலக்கியவிழாவுக்கு அதுவரை பொள்ளாச்சி நகரம் சந்தித்ததில்லை. பாவேந்தர் தம் பேருரையில் பாரதியோடு தமக்கேற்பட்ட உறவையும், அன்பையும் உணர்ச்சியோடு எடுத்தியம்பினார். பாரதி பாடல்கள் பலவற்றை எப்படிப் பாட வேண்டும் என்று பாடிக் காட்டினார். சில பாடல்கள் பிழையாகப் பதிக்கப்பெற்றிருப்பதாகவும் மொழிந்தார். உரையாடல் போலவும், இசை நிகழ்ச்சி போலவும்-ஒரு சொற்பொழிவு போலல்லாமல்-ஒரு கலைநிகழ்ச்சி போலவும் பாவேந்தர் உரை அமைந்தது. கோல்கைக் கொண்டு வாழ்' என்ற பாரதி வரியைத் தவறாகப் புரிந்து கொண்ட சுதேசமித்திரன் பத்திரிகையைக் கேலி செய்தார். கதா காலட்சேபங்கள் "கீர்த்தனாரம்பத்திலே என்று தொடங்குவதை எடுத்துக்காட்டி ஒரு புதுரம்பம் கண்டுபிடிச்சிருக்கான்-கீர்த்தனாரம்பம் என்று கிண்டல் பண்ணினார். பாவேந்தரை மேடையில் பேச வைக்க முடிந்ததே என்ற பெரிய நிம்மதி ஏற்பட்டது. 米 அன்றிரவு பாவேந்தரும் பழனியம்மாளும் பயணியர் விடுதியில் தங்கினர். அதிகாலையிலேயே நண்பர் பழனியப்பன் இல்லத்தி லிருந்து சூடான இட்லியும், காரமான குழம்பும் கொண்டு வரப்பட்டது. பாவேந்தர் இச்சிற்றுண்டியை வெகுரசனையோடு உண்டார். மதிய உணவுக்குப் பாவேந்தரின் பழைய நண்பர் குமாரசாமி பிள்ளை வீட்டுக்குப் போகும்வரை பல செய்திகளைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தார். கூட்டத்தின் நிதிக் குறைபாடடைப்