பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 389 சென்று விட்டார்களே, விழா எவ்வாறு நடக்கும்?' என்று கேட்டார்கள். முதல்வர் அனுமதி வேண்டுமே என்று தயங்கினார்கள். உணர்ச்சி வயப்பட்ட நான், விழா நடந்தே தீரவேண்டும்; முதல்வரிடம் அனுமதி பெற்று விடுவது என் பொறுப்பு: காஞ்சிபுரம் நகர எல்லையில் உள்ள மாணவர் விடுதிக்குச் சென்று செய்தியைக் கூறி மாணவர்களை அழைத்து வாருங்கள் என்று நண்பர் பேராசிரியர் மு.பி.பா. அவர்களிடம் கூறிவிட்டு, முதல்வர் அறைக்குச் சென்றேன். முதல்வர் பேராசிரியர் எஸ்.சிவசுப்பிரமணியன் அவர்கள் என் மீது அன்பு கொண்டவர்; என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். எந்தக் கருத்தாக இருந்தாலும் வாதாடி நம்மைச் சம்மதிக்கச் செய்யும் ஆற்றல் பெற்றவர். முதல்வர் அவர்களுடன் பேராசிரியர் மா.கி. தசரதன் அவர்களும் இருந்தார்கள். விழாவைத் தள்ளி வைப்பதற்கான காரணங்களைக் குறித்து என்னிடம் விரிவாக எடுத்துக் கூறினார்கள். முதல்வர் அவர்களுடன் பேராசிரியர் தசரதன் அவர்களும் சேர்ந்து கொண்டு பேசுவது எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. பரபரப்புடன் காணப்பட்ட நான் ஒரு நிலையில் உணர்ச்சிவசப் பட்டு, பேராசிரியர்தசரதன் அவர்களைப் பார்த்து சார்; உங்களுடன் நான் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு, முதல்வரிடம் சார்!. நீங்கள் என்ன சொன்னாலும் என் காதில் விழாது; விழா நடக்க வேண்டும். அனுமதி தாருங்கள் என்று வலியுறுத்தினேன்; வேண்டினேன். "கூட்டம் இல்லாமல் விழா சிறக்காது’ என்றார் முதல்வர். கூட்டம் வந்துவிடும்; வந்துவிட்டது, ஏனெனில் நான் வரும் வழியிலேயே மாணவர்களிடம் விழா நடக்கும். வாருங்கள் என்று கூறி வந்துள்ளேன் என்றேன் நான். பிறகு முதல்வர் சரி, ஆறுமுகம் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டாற்போல் தோன்றுகிறது. எனக்கொன்றும் தடையில்லை; விழாவை நடத்துங்கள் என்று அனுமதி கொடுத்துவிட்டார். விழா அரங்கம், மாணவர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மாலை 5 மணியளவில் விழா தொடங்கியது. தலைமையுரையில் பாவேந்தர் தமிழகத்தின் இரு பெரும் பல்கலைக்கழகங்களில் இரு பெருங் கங்காணிகள்; இவர்கள் இருக்கும்வரை தமிழ் வளராது-வாழாது. என்று அரிமா போல் நின்று, வீர முழக்கமிட்டார். தமிழ்ப் பற்றுடன் வாழ வேண்டிய இன்றியமையாமை குறித்தும், தமிழ் வளர்ச்சிக்கான