பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 395 சேர்ந்து கடற்கரை மனலில் விளையாடுவார். நண்டுகளை எங்களுக்குப் பிடித்துக் காட்டுவார்; கிளிஞ்சல்களைப் பொறுக்கித் த்ருவார். உணர்ச்சியால் உந்தப்பட்ட சில வேளைகளில் பேப்பர் கொடு என்று எங்களைக் கேட்பார். அவ்வேளையில் பேப்பர் கிடைக்காமல், அங்குக் கிடைக்கும் சிறுதுண்டுக் காகிதங்களை எடுத்துக் கொடுப்போம். அதில் கிளி, பருந்து, வண்டு ஆகியவற்றின் சிறு ஒவியங்களை வரைந்து காண்பிப்பார். அவைகளைப் பற்றிப் பாடல் புனைந்து எங்களுக்குப் பாடிக் காட்டுவார். பாவேந்தர் வயதில் முதிர்ந்தவர்; உலகம் வியக்கும் பெருங்கவிஞர். ஆனால் குழந்தைகளுடன் உறவாடும்போது தாமும் குழந்தையாகவே மாறிவிடும் இயல்பினை உடையவர். ஒருசமயம் நாங்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒருவன் சுண்டல் விற்றுக் கொண்டு வந்தான். அப்போது நாங்கள் சுண்டலைப் பற்றிப் பாடவேண்டும் என்று விளையாட்டாகக் கேட்டோம். உடனே கவிஞர் மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு காகிதத்தை எடுத்தார். சுண்டல் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? என்று ஒரு வினாவை எழுப்பி விட்டுக் கவிதை புனையத் தொடங்கிவிட்டார். இதோ அக் கவிதை: சூட்ட டுப்பில் ஒருபானைக்குள் வார்த்த நீரில் ஒருபடி கடலை போட்டெரித்துப் பொங்கிய நீரும் சுண்ட இறக்கித்த் தாளித் திடுவதால் சுண்டல் என்பார் அதன் பெயர் உண்டால் உண்ண உனத் தெவிட்டாதே. இக்கவிதையை அவரே நிறுத்தி நிறுத்தி எங்களுக்குப் படித்துக் காட்டினார்; எங்களையும் படிக்கச் சொன்னார். குழந்தைகளாகிய எங்கள் உள்ளத்தைக் கவிதையால் நிறைவு செய்த நிறைகவி பாவேந்தர் பாரதிதாசன். 米 'பாரதிதாசன் பிக்சர்ஸில் பங்குதாரராக இருந்த ஆசிரியர் பாலு இவர்மீது ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கு புதுவை நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்து. ஒரு நாள் அவசரமாக நீதிமன்றத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். குழந்தைகளாகிய நாங்களும் அவருடன் காரில் வர அனுமதி கேட்டோம். சரி காரில் ஏறிக் கொள்ளுங்கள்; என்றார். நாங்களும் ஏறிக் கொண்டோம்.