பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 397 >k - 1958-ஆம் ஆண்டு புரட்சிக் கவிஞரும் அவரைச் சார்ந்த சிலரும் புதுவையில் பாரதியாருக்கு விழா எடுக்க விரும்பினர். மாணவர்களுக்காக இசைப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என்று பாரதியைப் பற்றிப் பல போட்டிகள் நடத்த முடிவு செய்தனர். இளஞ் சிறுவர்களுக்குப் பாவேந்தரே நேரடியாகப் பயிற்சி கொடுத்தார். தொண்டு செய்யும் அடிமை--உனக்குச் சுதந்திர நினைவோடா? என்ற பாரதியின் பாடலை நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் உள்ள 'மாடுதின்னும் புலையா--உனக்கு மார்கழித் திருநாளா? என்ற வர்ண மெட்டில் அவரே பாடிக் காட்டினார். பாருக்குள்ளே நல்ல நாடு... எங்கள் பாரத நாடு என்ற பாரதியின் பாடலை உணர்ச்சி பொங்கப்பாடி எங்களுக்குப் பயிற்சி அளித்தது இன்றும் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அவ்விழாவிற்குச் சென்னையிலிருந்து பாரதியாரின் புதல்வியர் களையும், பாரதியாரின் நண்பரான சங்கு சுப்ரமணியத்தையும் சிறப்பு விருந்தினராகப் பாவேந்தர் அழைத்து இருந்தார். விழா பாவேந்தர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பாரதியாரைப் பற்றிப் பலரும் பேசினர். திருவாளர் சங்கு சுப்ரமணியம் பேசும்போது, 'பாரதி சாதியை எதிர்க்கவில்லை; அவ்வாறு எழுதவும் இல்லை என்று பேசினார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பாவேந்தர் எழுந்து பொதுமக்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டு, சங்கு சுப்ரமணியத்தின் கருத்துக்களை ஆதாரத்துடன் மறுத்துப் பேசினார். அது மட்டுமன்றிப் பொதுமக்களின் கோபத்துக்கு ஆளான சங்கு சுப்ரமணியத்தைத் தம்முடன் அழைத்துச் சென்று அரவிந்தர் ஆசிரமத்தில் தங்க வைத்து இரவோடிரவாக மிகப் பாதுகாப்புடன் கடலூர் வழியாகக் காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தார். திருவாளர் சங்குசுப்ரமணியம் பார்ப்பனராக இருந்தாலும், பார்ப்பனியத்தை எதிர்க்கும் பாரதிதாசன் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்துப் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தது எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியது. குற்றம் குறைகளைக் கண்ட இடத்திலேயே கண்டிக்கும்