பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 பாட்டுக்குழந்தை பாரதிதாசன் இயல்புடையவர் பாரதிதாசன். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், யார் தலைவராக இருந்தாலும் அஞ்சும் வழக்கம் அவருக்குக் கிடையாது. எந்தச் சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் தம் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை அச்சமின்றி வெளியிடும் ஆற்றல் மிக்கவர் அவர். 1959-ஆம் ஆண்டு புதுவையில் திரு.முருகையன் அவர்களின் திருமணத்தைப் புரட்சிக் கவிஞர் தலைமை ஏற்று நடத்தினார். அத்திருமண விழாவில் பழைய கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசிய தமிழ்ப்புலவர் ஒருவரை உட்காரச் செய்ததுடன், அவருடைய மூடக் கொள்கைகளைக் கடிந்து பேசினார்; புலவருக் கும் அறிவுரை வழங்கினார். மணமக்களுக்குத் தேவையான கருத்துக் களையே மணவிழாவில் கூறவேண்டும் என்றும் வற்புறுத்தினார். காலத்துக்கேற்ற புதுமையான கருத்துக்களை மணமக்கள் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையிலும் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 'காதலர் இருவர் கருத்தொருமித்து, ஆதரவு பட்டதே இன்பம் என்று' விளக்கினார். காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டு குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் நன்மை சேர்ப்பது மணமக்கள் கடமை என்பதைக் குறிப்பிட்டுக் கூறினார். முடைநாற்றம் வீசும் மூடக் கருத்துக்களை வன்மையாகக் சாடினார். பாவேந்தர் பிறந்த நாளைப் பற்றிப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் வெளியான அவருடைய நூல்களிலும், ஏடுகளிலும் அவர் பிறந்த நாள் 27.4.1891 என்றும், 18.4.1891 என்றும் 9.4.1892 என்றும் பலவாறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தம் பிறந்த நாளினை 17.4.1891 என்று தம்மிடம், பாவேந்தர் கூறியதாகப் பாவேந்தர் நினைவுகள் என்ற நூலில் கவிஞர் முருகு சுந்தரம் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் முருகு சுந்தரம் ஒருமுறை என்னை நேரில் சந்தித்தபோது நமக்கு ஏன் வீண் குழப்பம்: புதுவை நகர் மன்றத்தில் அவர் பிறப்புப் பதிவாகியிருக்குமே! புதுவை போனால் நகர் மன்றம் சென்று அவர் பிறப்புத் தொடர்பான ஆவணங்களைப் படி எடுத்துக் கொண்டு வாருங்கள்! என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் அடுத்த முறை புதுவை சென்றபோது புதுவை மேரி (நகர மன்றம்)யின் மேலாண்மையிடம் தொடர்பு கொண்டு பாவேந்தர் பிறந்த நாள் பதிவேட்டின் நகல் ஒன்றுபெற்றேன். அதிலுள்ள செய்தி வருமாறு: