பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம்mēs- - 403 ந்தமிழ்ச் செல்வர் வாழி மொழிகின்றோம் அவருக்கு நன்றி! சித்தனார் வழங்கும் விருந்துக் கட்டுரை நம் சிந்தனைக்குச் சுவையான விருந்து. புரட்சிக்கவி எனும் தேனினுமினிய செந்தமிழ்க் கவிதை நூலைத் தமிழுலகுக்கு வழங்கிப் புரட்சிப் பாவேந்தர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர் நம் பாவேந்தர் பாரதிதாசனார் அவர்கள். அவர் பாடல்கள் அனைத்தும் புரட்சி மணம் வீசுவன. எனினும் அவர் பேச்சும் புதுமைப் புரட்சியை ஊட்டும் தன்மையதாகவே விளங்கிற்று. ஒரு திருமணவிழா பாவேந்தர் தலைமையில் நடைபெற்றது. அத்திருமண விழாவிற்குப் பாவேந்தருடன் யானும் சென்றிருந்தேன். மணமகன் பட்டதாரி இளைஞன். மணமகள் ஓரளவே படித்தவள். விழாவில் பாவலர் பெருமான் அறிவுரை வழங்குகிறார் அது புதுமையும் புரட்சியும் கலந்த அறிவுரையாக மிளிர்ந்தது. ‘மணப்பெண்ணுக்குச் சில அறிவுரைகள் என்று தொடங்கினார். பெண்ணுரிமை பற்றிப் பாரதியாருக்குப் பிறகு பாவேந்தர் தாம் மிகுதியாகப் பாடியவர் என்பதை நாம் அறிவோம். இனி அவரின் அறிவுரையைக் காண்போம். "தமிழ் நாட்டினர் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்; வந்த விருந்தைப் பேணி அனுப்பி விட்டு, வரும் விருந்தை எதிர்நோக்கி நிற்பார்கள். விருந்தில்லாத உணவு மருந்துக்கு ஒப்பாகும் என்பது தமிழ்ப் பழமொழி. விருந்தில்லாத வீடும், குழந்தையில்லாத வீடும் ஒன்றென்று பாடியிருக்கிறார்கள். திருவள்ளுவரும் விருந்தோம்பலைப் பற்றி ஓர் அதிகாரமே பாடி வைத்துள்ளார். இப்படியெல்லாம் நம் நூல்கள் பேசும். மணமகளே! திருமணத்திற்குப் பின் நீங்கள் தனிக் குடித்தனம் செய்கிறீர்கள். நீ உன் கணவன், ஒரு குழந்தை - இது உன் குடும்பம். நீ உங்கள் இருவருக்கும் அளவாகப் பகல் உணவு சமைத்திருக்கிறாய். கணவன் தன் அலுவலகத்திலிருந்து பகல் 1 மணியளவில் வீட்டிற்கு வருகிறான். வரும்போது உடன் ஒரு தீ வட்டியை அழைத்துக் கொண்டு வருகிறான்.