பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 அவிருந்து 'கண்ணகி இவன் என் பள்ளித் தோழன். இந்த ஊரில்தான் தொழில் செய்கிறான. இவனை வழியில் பார்த்தேன்; அழைத்து வந்து விட்டேன் இலைபோடு - என்று கூறுகிறான். கணவன் ஆணை, புது விருந்து கண்ணகி என்ன செய்வாள்! உடனே இரண்டு இலைகள் போடுகிறாள். இருவருக்கும் உணவு பரிமாறுகிறாள். இருவரும் உணவு உண்கின்றனர். 'கண்ணகி! இன்று கூட்டு குழம்பு எல்லாம் நன்றாயிருக்கின்றன. இவனுக்கு இன்னும் சோறு வை: கூட்டு போடு: கணவன் கட்டளை இடுகிறான். விருந்துண்ண வந்தவர் வேண்டாம்: போதும் என்கிறார். இவன் அப்படித்தான் சொல்லுவான், நீ போடு என்கிறான் கணவன். நீ சோறும், குழம்பும், கூட்டும் சற்றுக் கூடுதலாகவே விருந்தினர் இலையில் படைக்கிறாய். 'வாழைப்பழம் இருந்ததே! கொண்டுவா! கணவரின் அடுத்த கட்டளை. இருவரும் உணவு உண்டு எழுந்தனர். பிற்பகல் இரண்டு மணிக்கு உன் கணவர் அலுவலகம் கிளம்பி விட்டார். விருந்தாக வந்த ஆளும் நன்றி சொல்லிவிட்டு அவருடனே நடந்தான். இனி நீ உணவு உண்ண வேண்டும்! அடுக்களையுள் சென்று, சோற்றுப்பானையைப் பார்க்கிறாய். அதில் பருக்கையும் இல்லை; குழம்பும் இல்லை; கறியும் இல்லை. அந்த வாழைப்பழத்தைத்தான் விட்டு வைத்தார்களா? அதையும் தின்று தொலைத்தார்கள். மீண்டும் உணவு தயார் செய்தாக வேண்டும். உனக்கோ காலையிலிருந்து வேலை செய்த அலுப்பு. சரி. இரவு பார்த்துக் கொள்வோம். இனியொரு முறை எப்படிச் சமைப்பது? என்று ஒரு குவளை தண்ணிரைக் குடித்துவிட்டுச் சுருண்டு கொள்கிறாய். மாலை அலுவலகத்திலிருந்து உன் கணவன் வீடு திரும்புகிறான்; 'கண்ணகி: கடற்கரைக்குப் போகலாம்-கிளம்பு’ என்கிறான், குழந்தையைச் சுமந்து கொண்டு நீ பின்னே நடக்க அவன் முன்னே நடக்கிறான். கடற்கரைப் பூங்காவை நீங்கள் அடைகிறீர்கள். அங்கே வெள்ளைக்காரர்களின் குழந்தைகளைக் கைவண்டிகளில் வைத்துத் தள்ளிக் கொண்டே சில பணிப்பெண்கள் உலவுகிறார்கள்.