பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 405 அக்குழந்தைகளைக் கண்டவுடன் உன் கண்கள் மகிழ்ச்சியால் மலர்கின்றன. ஏதோ ஒரு புதுமையான படைப்பைக் கண்டவள் போலத் திகைத்து நிற்கிறாய். என்ன! அதுவும் குழந்தைதான்; உன் கையில் இருப்பதும் குழந்தை தான். பின் ஏனிந்தத் திகைப்பு? வெள்ளைக்காரக் குழந்தைகள் கொழுகொழுவென்று மூக்கும் விழியுமாய்ப் பார்ப்போர் விழிகளைக் கவரும் வண்ணம் உள்ளன. உன் குழந்தை நாக்குப் பூச்சியைப் போல் இருக்கிறது. ஏன் அந்தக் குழந்தைகள் அப்படி? உன் குழந்தை இப்படி? இது உன் உள்ளத்தில் எழுந்துள்ள வினா. வெள்ளைக்காளி மணிக்கணக்கோடு சாப்பிடுவாள். காலை 8 மணி; பகல் 12 மணி; இரவு 8 மணி. அவள் எப்போதும் பகல் பட்டினி கிடப்பதில்லை. அவள் கணவன், பகல் சாப்பாட்டிற்கு வரும்போது ஒரு விருந்தினனை அழைத்து வரமாட்டான். அப்படியே அவன் ஒருவனை விருந்துண்ண அழைக்க விரும்பினால் அதற்கொரு நாளைக் குறிப்பிட்டு, மணியையும் சொல்லி அன்றைக்கு வரச்சொல்வான். அன்று அவனுடன் அனைவருக்கும் உணவு சிறந்த முறையில் தயார் செய்திருப்பார்கள். எல்லாரும் மகிழ்ச்சியுடன் விருந்துண்பர். நம் மனைவி இருவர்க்குத்தான் உணவு தயார் செய்திருப்பாள். நாம் மூன்றாமவனை அழைத்துப் போகிறோமே என்று நமது கணவர்கள் சிந்திப்பதில்லை. நம் நாட்டுப் பெண்களுக்கு இப்படிப்பட்ட இக்கட்டுகளோடு, வாரத்தில் இரண்டு மூன்று விரதநாட்கள் வரும். இப்படிப் பட்டினி கிடந்து உடல் வலிமை இழந்த பெண்கள், பிள்ளைகள் பெற்றால் அவை நாக்குப்பூச்சிகளைப் போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்? - கணவன் செய்த தவறினால் இந்நாடு வலிமை வாய்ந்த பிள்ளைகளைப் பெறமுடியாத நிலை ஏற்படுகிறது. அறிவாற்றல் அற்றுச் சூம்பல் தோளும், ஒளியிழந்த கண்ணும் உள்ள பிள்ளைகள் தம் மொழியையும் நாட்டையும் காப்பாற்றுதல் கூடுமோ? மீளாத அடிமை நிலைதானே இங்கு மிஞ்சும்? நடுப்பகல் ஒரு மணிக்கு, ஒரு வீட்டிற்கு முன்னறிவிப்பின்றி உணவுக்குச் செல்கிறோமே! அச்செய்கை அந்த வீட்டில்