பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ofto–oud * - 109 米 துரைசாமி முதலியார் அந்நாளில் புதுவைப் போரறிஞர். இவருக்கும் பாரதிதாசனார்க்கும் வித்வக் காய்ச்சல். இருவரும் சுவைமிக்க துண்டுப் பிரசுரங்களைப் பரிமாறிக் கொள்வர். துண்டுப் பிரசுரத்தோடு துரைசாமி முதலியார் எங்கள் வீட்டுக்கு வருவார். 'சிவகுரு! பார்த்தியா அவன் வேலையை?’ என்று என்தந்தையாரிடம் துண்டுப் பிரசுரத்தைக் காட்டுவார். என் தந்தையார் துண்டுப் பிரசுரத்தைப் படித்து விட்டுக் கொஞ்சம் வேகமாத்தான் இருக்கு, போனாப் போகுது. இப்படியே விட்டுடுங்க என்று சமாதானப் படுத்துவார். நீ எப்போதும் இப்படித்தான்பா' என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார் துரைசாமி முதலியார். என் தந்தையார் பாவேந்தரைச் சந்தித்தால் போனால் போகுது. இதைப் பெரிசு படுத்தாதே என்று சொல்வார். உடனே பாவேந்தர் நீ இப்படித்தான் சிவகுரு, இவன்களை எல்லாம் உடனுக்குடனே சூடு கொடுக்காட்டா நம்ம மேலே ஏறி உட்கார்ந்துக்குவானுங்க” என்று சொல்லுவார். துரைசாமி முதலியார் மேல் இவ்வளவு பகைமை பாராட்டிய பாவேந்தர் ஒரு நாள் எங்கள் இல்லத்துக்கு வந்தார், அப்போது எங்கள் வீடு வேளாளர் வீதியில் இருந்தது. திண்ணையில் கம்பீரமாக உட்கார்ந்தார். என் தந்தையார் வெளி வந்ததும், சிவகுரு நம்ம பண்டிதர் மறைஞ்சுட்டாரே. அவருக்கு ஒர் இரங்கல் கூட்டம் போட வேண்டாமா?’ என்றார். அப்படியே எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. துரைசாமிப் பண்டிதர் மறைந்ததும் பாவேந்தரிடம் இருந்த வித்வக் காய்ச்சலும் மறைந்துவிட்டது. திண்ணையில் உட்கார்ந்த வண்ணமே இருவரும் இரங்கற் கூட்ட நிகழ்ச்சி நிரல் தயாரித்து விட்டனர். ஈசுவரன் கோவிலுக்கெதிரில் பிரம்மராயர் சுப்ரமணிய ஐயர் வாழ்ந்து வந்தார். இவர் பிரஞ்சுக் கல்லூரியில் பேராசிரியர். ஒரு நாள் பேராசிரியர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் கையில் கவிதை நூல் ஒன்றிருந்தது. என் தந்தையாரிடம் வாசித்துக் காட்டினார். அத்தனையும் சீர்திருத்தப் பாடல்கள். அந்தப் பாடல்கள் வாசிக்கும் போது என் தந்தையார் ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார். உடனே சுப்பிரமணிய ஐயர் சிவகுரு நான் என்ன இப்படிப் பாடி இருக்கறன்னு நினைக்கிறியா? பாரதிதாசன் பாட்டுக்கிட்ட இதுகள் நிக்காது. அந்த மாதிரி இனி எவனும் பாட முடியாது. ஐயர் நானா